பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி.. இன்று தீர்ப்பளிக்கும் உச்ச நீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி கடந்த ஜன. 5ஆம் தேதி பஞ்சாப் சென்றிருந்தார். அப்போது அவர் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்றில் போராட்டகார்கள் மறியலில் ஈடுபட்டதால் பிரதமர் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியவில்லை.

Supreme Court will pronounce its verdict today in the case of lapse in the security of Prime Minister Modi

இதனால் அங்குள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் கார் சுமார் 20 நிமிடங்கள் வரை நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பினார்,

இது பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் மிகப் பெரிய குறைபாடாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க மத்திய அரசும் சரி, பஞ்சாப் அரசும் சரி தனித்தனியாகக் குழுக்களை அமைத்திருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தலைமை வழக்கறிஞர், பஞ்சாப் அரசுக்குப் பிரதமர் மோடியின் கார் பயணம் குறித்த முன்கூட்டியே தெரியும் என்றும் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

அப்போது குஜராத் பாதுகாப்பு குறைபாடு குறித்து நடந்து வரும் அனைத்து விசாரணைகளையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும், இது தொடர்பாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில், இன்று (ஜன.12) மீண்டும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+