சொத்து உரிமை.. பத்திரப்பதிவு செய்தாலும் சொத்து சொந்தமாகாது.. உச்ச நீதிமன்றம் மிகப்பெரிய தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்ச நீதிமன்றம் சொத்து உரிமை தொடர்பாக மிகப்பெரிய தீர்ப்பை வழங்கியுள்ளது, ஒரு சொத்தை பதிவு செய்தால், தானாக சொத்தின் உரிமை கிடைக்காது என்றும், சொத்து தொடர்பான முழு ஆவணங்களும் இருந்தால் தான் அந்த சொத்தின் உரிமையாளர் ஆக முடியும் என்று கூறியுள்ளது. இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள சொத்து உரிமையாளர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவர் ஒரு சொத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்தால் மட்டும் அந்த சொத்துக்கு முழுமையாக உரிமை கொண்டாட முடியாது என்றும் பதிவு ஆவணங்கள் கூடுதலான ஆதாரமாக மட்டுமே கருதப்படும் என்றும், சொத்தின் மீது வங்கிக் கடனோ அல்லது இதர பிரச்னைகளோ நிலுவையில் இல்லை என்ற தடையில்லா சான்றிதழ், சொத்து வரி செலுத்துவதற்கான ஆவணங்கள் மிக அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. சொத்து வாங்குவோர் கவனிக்க வேண்டிய முக்கியமான தீர்ப்பின் விவரங்களை பார்ப்போம்.

Supreme Court s property rights verdict Just registering a property does not make you an owner

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சம்

ஒருவர் இன்னொருவரிடம் சொத்தை வாங்கி பதிவு செய்வதால் மட்டுமே அந்த சொத்துக்கு ஒருவர் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. பதிவு ஆவணங்கள் கூடுதலான ஆதாரமாக மட்டுமே கருதப்படுவார்கள். அதாவது ஒரு சொத்தை முழுமையாக பயன்படுத்துவது, வேறு ஒருவருக்கு மாற்றி விடுவது போன்றவற்றிற்கு இந்தப் பதிவு ஆவணங்கள் மட்டுமே போதுமானது இல்லை.. அத்துடுன் சொத்து தொடர்பான அத்தனை ஆவணங்களும் முழுமையாக இருக்க வேண்டும். அப்போது தான் அதை ஒருவர் உரிமையாளராக முடியும்.

சேல் அக்ரிமென்ட்

சொத்து அமைந்துள்ள சர்வே எண்கள், குறிப்பிட்ட சொத்தின் சொத்துரிமை யார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற அந்தந்த மாநில அரசு அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்கள், சொத்து விற்கப்படுவதன் வாயிலாக அதன் உரிமை மாற்றப்படுகிறது. அத்துடன் ஆவணத்தில் எவ்வளவு ரூபாய்க்கு அது விற்கப்படுகிறது, என்னென்ன நிபந்தனைகள் போன்ற விபரங்கள் அடங்கிய, 'சேல் அக்ரிமென்ட்' இருக்க வேண்டும். அதில் விற்பவர்கள், வாங்குபவர்களின் கையொப்பம், சாட்சிகளின் கையொப்பம், 'ஸ்டாம்ப் டியூட்டி', பத்திரப்பதிவு ஆவணங்களில் மேற்கொள்ளப்படும் பதிவு ஆவணங்கள் இருக்கும்.

தடையில்லா சான்று

பத்திரப்பதிவு செய்த பின்னர், சொத்துரிமைக்கான பத்திரப்பதிவு அலுவலகம் வழங்கும் சான்றிதழ், குறிப்பிட்ட அந்த சொத்தின் மீது வங்கிக் கடனோ அல்லது இதர பிரச்னைகளோ நிலுவையில் இல்லை என்ற தடையில்லா சான்றிதழ், சொத்து வரி செலுத்துவதற்கான ஆவணங்கள் மிக அவசியம் ஆகும்.

'மியூட்டேஷன்' சான்றிதழ்

அதேபோல் ஆவணங்கள் அனைத்தையும் அரசு அலுவலகத்தில் கொடுத்து, சொத்தின் உரிமை பற்றிய விவரங்களை பதிவு செய்யும், 'மியூட்டேஷன்' சான்றிதழ் (பிறழ்வு சான்றிதழ்) ஆகியவை அனைத்தும் சேர்ந்திருந்தால் தான் ஒரு சொத்து முழுமையாக இன்னொருவருக்கு அதன் உரிமை மாற்றப்பட்டதாக கருதப்படும்" இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஆவணங்கள் மாற வேண்டும்

பத்திரம், பட்டா வாங்கினாலே சொத்து உங்கள் பெயரில் வந்துவிடும் என்பதை தாண்டி, இன்னொரு விஷயமாக பிறழ்வு சான்றிதழும் தற்போது முக்கியமாகிறது. அதாவது சொத்தின் அனைத்து ஆவணங்களும் வாங்குபவர் பெயரில் மாற வேண்டும். அதேபோல் சொத்து வரி, மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் போன்றவற்றை வாங்குபவரின் பெயருக்கு மாற்றும் வகையில், அரசு பதிவுகளில் பெயரை மாற்றவேண்டும். எல்லாம் சரியாக இருந்தால் தான் மட்டுமே நீங்கள் சொத்தின் உரிமையாளர் என்று உரிமை கொண்டாட முடியும்.

உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள இந்த தீர்ப்பு, சொத்துக்களை அபகரிப்பது, முறைகேட்டில் ஈடுபடுவது போன்றவற்றை தடுப்பதுடன் சொத்து பரிமாற்றங்களிலும், ரியல் எஸ்டேட் துறையிலும், சட்டத்துறையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற சொத்து உரிமைத் தீர்ப்பு

சொத்து உரிமையாளர்கள் இப்போது அனைத்து சொத்து ஆவணங்களையும் சட்டப்பூர்வமாக சரிபார்த்து, உரிமை மற்றும் பதிவு சிக்கல்களைப் புரிந்துகொள்ள சட்ட நிபுணர்களை அணுக வேண்டும். சொத்துச் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நீதிமன்றங்கள் அவற்றை எவ்வாறு அணுகுகின்றன என்பது குறித்தும் அவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் யார் பாதிக்கப்படுவார்கள்?

இந்தத் தீர்ப்பின் விளைவாக ரியல் எஸ்டேட் துறை மற்றும் சட்ட நடைமுறைகள் மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. பில்டிங் டெவலப்பர்கள், வாங்குபவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்ட சட்ட கட்டமைப்பிற்குள் செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ற்படும். இந்த புதிய தீர்ப்பு காரணமாக சொத்து பரிவர்த்தனைகளை மிகவும் நம்பகமானதாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம் சட்டப்பூர்வ உரிமை வெறும் பதிவை விட முக்கியமானது என்பதால் சொத்து மதிப்புகளையும் அது பாதிக்க வாய்ப்பு உள்ளது.

சொத்து சட்டங்கள்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவில் தற்போதைய சொத்துச் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சொத்தை பதிவு செய்வதற்கும் அதை சட்டப்பூர்வமாக சொந்தமாக்குவதற்கும் இடையே தெளிவாக வேறுபடுத்தும் வலுவான மற்றும் வெளிப்படையான சட்ட அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வலியுறுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+