தப்லீக் மாநாடு- கொரோனா பரவலுக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 36 வெளிநாட்டவர் விடுவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 36 வெளிநாட்டவரை டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்தது.

நாட்டில் கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் ஏராளமான வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.

Tablighi Jamaat Case: Delhi court acquits 36 foreigners today

தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கும் கொரோனா இருந்தது உறுதியானது. இதனால் தப்லீக் ஜமாத் மாநாடுதான் நாட்டில் கொரோனா பரவலுக்கு காரணம் என ஒருதரப்பு குற்றம்சாட்டியது.

இந்த நிலையில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 955 பேர் மீதும் கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் என வழக்கு தொடரப்பட்டது. இதில் பெரும்பாலானோர் நீதிமன்ற அனுமதியுடன் தாய்நாடு திரும்பிவிட்டனர்.

44 பேர் மட்டும் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருந்தனர். இவர்களில் 8 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஒன்றில் மும்பை உயர்நீதிமன்றம் வெளிநாட்டவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்திருந்தது.

இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றமும் தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற எஞ்சிய 36 வெளிநாட்டவரையும் இன்று விடுவித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+