அராஜகம்.. இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைந்து சூறை.. முக்கிய டாக்குமென்ட்களுடன் பறந்த தாலிபன்கள்
தாலிபன்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை சூறையாடி உள்ளனர்
டெல்லி: ஆப்கானில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தை தலிபான்கள் அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்து முக்கியமான டாக்குமென்ட்களையும் எடுத்து சென்றுவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தந்துள்ளது.
Recommended Video
ஆப்கான் விவகாரத்தை உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது.. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தலிபான்...
இந்த விவகாரம் உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கடுமையான மனித உரிமை மீறல் சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது.

பெண்கள்
பெண்கள் பலவிதமான அடக்குமுறைகளுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பயந்து, அந்த நாட்டில் இருந்து தப்பித்து ஓடவும் வழிவகுத்து விட்டது... "யாரும் பயப்பட தேவையில்லை, அமைதியான நல்ல ஆட்சியை தருவோம்" என்று தாலிபன்கள் நம்பிக்கை தந்தாலும், அதை மக்கள் ஏற்க தயாராக இல்லை.. நாளுக்கு நாள் திடீர் திடீர் திருப்பங்கள் அங்கு நடந்து வருகின்றன.. பெண்களுக்கான தாக்குதல்கள் அதிகமாகி வரும் நிலையில், அந்நாட்டு மக்களுக்கான பாதுகாப்பு குறித்த பீதியும் ஏற்பட்டுள்ளது.

காபூல்
ஆப்கன் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் உள்ளது... இந்த இந்திய தூதரகத்தில் ஒருசில அதிகாரிகள் மட்டுமே இருக்கும்நிலையில், அவர்களையும் இந்தியா அழைத்து கொண்டு வர எல்லாவிதமான முயற்சிகளும் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், தலிபான்கள் திடீரென கந்த்ஹருக்கு சென்று இந்திய துணை தூதரகத்தின் அலுவலகத்திற்கு வந்தனர்..

சூறை
அந்த ஆபீஸ் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை மொத்தமாக சூறையாடினர்.. மேலும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த முக்கியமான டாக்குமெண்ட்களை எடுத்து கொண்டனர்.. அத்துடன், ஆபீசுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளையும் எடுத்து சென்றுள்ளனர். இதுதான் பரபரப்பை கிளப்பி உள்ளது.

படை
அங்குமட்டுமல்ல, கந்த் ஹர், ஹீரட் போன்ற இடங்களில் 4 துணை துாதரகங்களும் செயல்பட்டு வருகின்றன.. இதில் ஹீரட், மசாரே ஷெரிப்-ல் உள்ள துணை தூதரகங்களையும் வேவு பார்த்தார்களாம்.. ஏற்கனவே, பெண்களுக்கான பாதுகாப்பு ஒருபக்கம் இருந்தாலும், வீடு வீடாக சென்று அமெரிக்க படைக்கு ஆதரவாக யார் யார் வேலை பார்த்தார்கள் என்று விசாரித்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்திய தூதரகங்களை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications