பெண் செய்தியாளர்கள் அனுமதி மறுப்பு? கடும் எதிர்ப்பிற்கு அடிபணிந்த ஆப்கான் அமைச்சர்! என்ன நடந்தது
டெல்லி: இந்தியா வந்துள்ள ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கிக் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பெண் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையாக வெடித்தது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்போது மீண்டும் பெண் செய்தியாளர்களுடன் ஒரு பிரஸ் மீட்டை நடத்தியுள்ளார் ஆப்கன் அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி.!
ஆப்கானிஸ்தானில் இப்போது தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அங்கு வெளியுறவுத் துறை அமைச்சராக அமீர் கான் முட்டாக்கி இருக்கிறார். இதற்கிடையே அவர் இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட இந்தியாவில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர் பல ஆலோசனைகளை நடத்தினார்.

வெடித்த சர்ச்சை
இதற்கிடையே வெள்ளிக்கிழமை அவர் பிரஸ் மீட்டை நடத்தினார். இருப்பினும், அந்தச் செய்தியாளர் சந்திப்பு மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அதாவது வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த அவரது செய்தியாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.. முட்டாக்கி இதனால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
மீண்டும் பிரஸ் மீட்
சர்ச்சைகளைத் தொடர்ந்து அவர் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த முறைப் பெண் செய்தியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அப்போது வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்த சர்ச்சைக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி விளக்கம் அளித்தார். அது வேண்டுமென்றே நடந்தது இல்லை என்றும் தவறுதலாக நடந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும், "வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பு மிக குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் சில பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. சிலரை மட்டுமே ஆப்கன் தூதரக அதிகாரிகளால் தொடர்பு கொண்டு அழைக்க முடிந்தது. அன்று இதுதான் நடந்தது.. இதைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை" என்றார்.
கடும் விமர்சனம்
முன்னதாக இந்திய ஆசிரியர் சங்கம் மற்றும் இந்தியப் பெண் பத்திரிகையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் முட்டாக்கி செய்தியாளர் சந்திப்பில் பெண் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாததைக் கடுமையாகக் கண்டித்தன. இது குறித்து அவர்கள் மேலும், "இந்திய மண்ணில் செய்தியாளர் சந்திப்பில் பாலினப் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. இதை செய்துவிட்டு வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் தூதரக வளாகங்கள் பாதுகாப்பு கோர முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
மத்திய அரசு விளக்கம்
இது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், மத்திய அரசு இது குறித்து விளக்கமளித்தது. முட்டாக்கி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மத்திய அரசுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியது. இருப்பினும் இதை ஏற்காத ஆசிரியர் சங்கம், "வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த நிகழ்வை நடத்தியதா இல்லையா என்பது கேள்வி இல்லை.. இதுபோன்ற ஒரு பாகுபாட்டிற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தது மிகவும் வருந்தத்தக்கது" என்று விமர்சித்தது.
எதிர்காலத்தில் இதுபோன்ற பாலின அடிப்படையிலான பாகுபாடு நிகழாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து ஆப்கானிஸ்தான் தூதரகத்துடன் பேச வேண்டும் என்று இந்தியப் பெண் பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.
ராகுல் காந்தி
பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்தது, மத்திய அரசை விமர்சித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடினார். இது தொடர்பாக அவர் மேலும், "ஒரு பொது இடத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்தியப் பெண்களுக்கு ஆதரவாக நிற்க முடியாது என்பதைப் பிரதமர் கூறும் விதமாகவே இந்தச் சம்பவம் இருக்கிறது.
நம் நாட்டில், எல்லாத் துறைகளிலும் பெண்களுக்குச் சம உரிமை இருக்கிறது. இவ்வளவு பெரிய பாகுபாடு நடந்த பிறகும் நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். உங்களின் "நாரி சக்தி' கோஷங்களில் உண்மை இல்லை என்பதையே இது காட்டுகிறது" என்று அவர் சாடினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications