பார்லிமென்ட்ல யார்னு பாருங்க.. சிவப்பு சேலையில் நடிகை தமன்னா! "அரசியலுக்கு வர தூண்டும்" பரபர கருத்து
டெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தமன்னா உள்ளிட்ட நடிகைகள் இன்று நாடாளுமன்றத்தைப் பார்வையிட்டனர். பின்னர் நடிகை தமன்னா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்றுப் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாள் நிகழ்வு வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. அப்போது 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர்.

இந்த கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. அதில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்குப் பிறகு இந்த மசோதா ஏகமனதாக லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குச் சிறப்பு அழைப்பாளர்களாக பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவத், ஈஷா குப்தா உள்ளிட்ட பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். அழைப்பை ஏற்று வருகை தந்த அவர்களுக்கு அமைச்சர் அனுராக் தாக்கூர் இனிப்பு வழங்கினார். மேலும் கலந்து கொண்ட நடிகைகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று சிறப்பு அழைப்பாளர்களாக நடிகைகள் தமன்னா, திவ்யா தத்தா உள்ளிட்ட நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை தமன்னா, "மகளிருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சாமானிய மக்களை அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கும்" எனத் தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்றத்திற்கு இன்று வரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மத்திய அரசின் அழைப்பின் பேரில் புதிய நாடாளுமன்றத்திற்கு இன்றும் நடிகைகள் வருகை தந்தது சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்










Click it and Unblock the Notifications