அயனாவரம் வீட்டிற்கு வந்தடைந்தது ஆம்ஸ்டிராங்கின் உடல்.. வழி நெடுக கதறி துடித்த ஆதரவாளர்கள்
டெல்லி: தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் சென்னை அயனாவரத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் இருந்து சுமார் 3 அரை மணி நேரத்துக்கு பின்னர் நள்ளிரவு 12.50 மணியளவில் அவரது உடல் வீட்டுக்கு வந்தடைந்தது. வாகனத்தின் முன்னும் பின்பும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. வழி நெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் கதறி அழுதபடி வந்தனர்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் நேற்று வீட்டு முன் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது மர்ம கும்பலினர் 8 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், முதலில் சம்பவம் நடந்த 4 மணி நேரத்திற்குள் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்ததாக தகவல் வெளியானது.
ஆனால் அவர்கள் 8 பேரும் காவல் நிலையத்தில் வந்து ஆஜராகவில்லை. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் தான் என்று போலீசார் தெரிவித்தனர். ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கபட்டிருந்தனர்.
இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியினரும் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு கொலையாளிகளை கைது செய்ய கோரி போராட்டம் செய்தனர். இந்த நிலையில் இன்று இரவு 9 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முதலில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கொடுத்தால் தான் உடலை வாங்குவோம் என கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியது. இதகிடையே ஆம்ஸ்ட்ராங் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் பழைய வீட்டிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் இருந்து சுமார் 3 அரை மணி நேரத்துக்கு பின்னர் நள்ளிரவு 12.50 மணியளவில் அவரது உடல் வீட்டுக்கு வந்தடைந்தது. வாகனத்தின் முன்னும் பின்பும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. வழி நெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் கதறி அழுதபடி வந்தனர்.
இறுதி அஞ்சலி நாளை நடக்கிறது. இதற்காக நாளை காலைசென்னை பெரம்பூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications