நாட்டுமாடு இனமே அழியும்.. பீட்டாவிற்கு சரமாரி பதிலடி தந்த கபில் சிபல்.. ஜல்லிகட்டு வழக்கில் சுளீர்
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கில் இன்று பீட்டா அமைப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பாக வாதம் வைத்த வழக்கறிஞர் கபில் சிபல் சரமாரி வாதங்களை வைத்தார்.
ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்து உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் இந்த போட்டிக்கு எதிராக இவர்கள் தொடுத்த வழக்கு அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்வியில், 100 மீட்டர் தூரத்தில் காளைகள் எப்படி ஓடி வெளியேறுகின்றன இதனால் காளைகளுக்கு காயம் ஏற்படாதா? அங்கே ஏன் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இது வெறும் கேளிக்கை விளையாட்டு தானே.. இதில் காளைகளின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.
எள்முனையளவும் தவறவிடக்கூடாது.. எடப்பாடி வழிநின்று ஜல்லிக்கட்டு உரிமையை காப்பாற்றுங்க.. மாஜி ஆவேசம்!

ஜல்லிக்கட்டு வழக்கு
இன்று இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பாக வாதம் வைத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜல்லிக்கட்டு போட்டிகளில் சில மரணங்கள் நடந்து இருக்கிறது உண்மைதான். ஆனால் இதை தடுக்கத்தான் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்தில் விதிகள் உள்ளன. இந்த விதிகள் காரணமாக மரணங்கள் தடுக்கப்படுகின்றன. இது வெறும் ஜாலிக்காக ஆடும் விளையாட்டு அல்ல. ஜல்லிக்கட்டு என்பது வெறும் கேளிக்கை அல்ல. காளைகளை அவர்கள் இதற்காக இத்தனை வருடம் பழக்கப்படுத்தவில்லை. இந்த ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டு காளைகளின் அங்கீகாரம் அதிகரிக்கும். அதன் மதிப்பு அதிகரிக்கும். காளைகளின் விலையும் மார்க்கெட்டில் அதிகரிக்கும்.

வாதம்
நாட்டு காளைகளை காக்க இது உதவும், என்று வாதம் வைத்தார். இதற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி கே எம் ஜோசப், நீங்கள் சொல்வது எல்லாம் இருக்கட்டும். ஆனால் காளைகள் மரியாதையோடு வாழ வேண்டுமே .. அதற்கு மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பயத்தை நாம் ஏற்படுத்த கூடாதே. நீங்கள் ஒரு விலங்கை பொம்மை போல பயன்படுத்த கூடாதே என்று கேள்வி எழுப்பினார். இதில் பதில் அளித்த கபில் சிபல், காளைகளுக்கு வலி, வேதனை இல்லை. இருக்கிறது என்றே வைத்துக்கொள்ளுவோம். மற்ற விலங்குகளை வைத்து போட்டிகள் நடப்பது இல்லையா? பல விலங்குகளை வைத்து வேலைகளை செய்கிறார்களே? அது தவறு இல்லையா?

கேளிக்கை
ஜல்லிக்கட்டு என்பது கேளிக்கை கிடையாது. இதில் காளைகளின் வீரத்தை காட்டுகிறார்கள். காளைகள் ஏன் முக்கியம் என்பதை காட்டுகிறது. குதிரைகளை மட்டும் போட்டிகளில் பயன்படுத்துகிறார்களே? அதில் என்ன தவறு இருக்கிறது. குதிரைகளை பயன்படுத்துவதை இவர்கள் ஏன் எதிர்ப்பது இல்லை? காளைகளுக்கு சாராயம் ஊற்றப்படுகிறது கண்களில் மிளகாய் பொடி தூவுகிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். காளைகள் இவர்களின் குடும்பத்தில் பிள்ளைகள் போல. பெற்ற பிள்ளைகளை யாரவது இப்படி நடத்துவார்களா?
இந்த ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டு காளைகள் உயிர் வாழ்கின்றன. அந்த காளைகளுக்கு நோய்கள் வரலாம்.

காளைகள்
ஆனால் ஜல்லிக்கட்டு காரணமாக காளைகளை இவர்கள் சிறப்பாக பாதுகாக்கிறார்கள். இல்லையென்றால் வெளிநாட்டு காளைகள் அந்த இடத்தை பிடித்துவிடும். ஜல்லிக்கட்டுதான் நாட்டு காளைகளை பாதுகாக்கிறது. சர்க்கஸ் போல ஜல்லிக்கட்டு ஒன்றும் கேளிக்கை கிடையாது, என்று கூறினார். இதற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி ஜோசப், ஜல்லிக்கட்டு மூலமாக நாட்டு காளைகள் பாதுகாக்கப்படுகிறது என்று எப்படி சொல்கிறீர்களா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த கபில் சிபல், ஜல்லிக்கட்டுக்கு பின்பாகவே காளைகளை, மாடுகளுடன் இணைய வைப்பார்கள். இனப்பெருக்கம் செய்ய வைப்பர்.ஜல்லிக்கட்டு நடக்காத சமயத்தில் இந்த இனப்பெருக்கம் நடக்காது. இந்திய காளைகளை, பாரம்பரிய இந்திய காளைகளை காக்க வேண்டும் என்றால் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அதில் என்ன தவறு இருக்க முடியும், என்று பதில் அளித்தார்.