Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரும் பதற்றம்.. டெல்லி ஜேஎன்யுவில் தமிழ் மாணவர்களின் மண்டை உடைப்பு! பெரியார் படத்தை சிதைத்த ஏபிவிபி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் உட்பட பலர் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி-யினர் கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி-ஐ சேர்ந்தவர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு அவர்கள் வைத்திருந்த பெரியாரின் படத்தையும் சிதைத்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஊர்வலம் சென்றனர்.

மும்பையில் ஐஐடியில் 18 வயது தலித் மாணவர் தர்ஷன் சொலான்கி பி டெக் பயின்று வந்து இருக்கிறார். அவர் கடந்த 12 ஆம் தேதி ஐஐடி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

 நிறுவன படுகொலை என புகார்

நிறுவன படுகொலை என புகார்

இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விடுதியில் சொலான்கியுடன் அறையில் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சொலான்கி மரணத்துக்கு நிறுவன படுகொலையே காரணம் என்று மும்பை ஐஐடியில் செயல்பட்டு வரும் APPSC எனப்படும் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம் என்று தெரிவித்தது.

ஜே.என்.யுவில் போராட்டம்

ஜே.என்.யுவில் போராட்டம்

தொடர்ந்து ஐஐடி வளாகங்களில் தலித், இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வரும் நிலையில் இதன் பின்னணியில் சாதி, மத ஒடுக்குமுறை இருப்பதாகவே குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இந்த நிலையில்தான் அவரது மரணத்துக்கு நீதிகோரி மாணவர்கள் போராடி இருக்கிறார்கள்.

பெரியார் படத்துடன் போராட்டம்

பெரியார் படத்துடன் போராட்டம்

பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் போன்ற விளிம்புநிலை மக்களுக்கா போராடிய தலைவர்களின் படங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் அங்கு பயின்ற தமிழ் மாணவர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த சத்ரபதி ஷிவாஜியின் படம் சேதம் அடைந்தது.

ஏபிவிபி தாக்குதல்

ஏபிவிபி தாக்குதல்

இதற்கு சொலான்கி மரணத்துக்கு நீதி கோரி ஊர்வலம் சென்ற இடதுசாரி மாணவர் அமைப்பினர்தான் காரணம் என்று கூறி அவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினரான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர்.

தமிழ் மாணவர்கள் காயம்

தமிழ் மாணவர்கள் காயம்

அத்துடன் அவர்கள் வைத்து இருந்த தந்தை பெரியார் படத்தையும் அவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏபிவிபி மாணவர் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஒரு தமிழ் மாணவரின் மண்டை உடைக்கப்பட்ட ரத்த வழிந்தோடியது. மற்றொரு மாணவருக்கு உடலின் பல பாகங்களில் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல்

ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல்

அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸை அழைத்ததாகவும், அப்போது அங்கு வந்த ஆம்புலன்ஸையும் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தாக்கியதாகவும் அதை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்களுடன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள். பெரியார் படத்தை சிதைத்து தமிழ்நாடு மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+