முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து- சிறுபான்மையினர் மீதான அமித்ஷா வன்மம்.. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு
டெல்லி: முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சிறுபான்மையினர் மீதான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வன்மம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி உள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு, முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இது தொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத ரீதியான இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றார். இதேபோல தெலுங்கானாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றார்.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடுக்கு எதிராக பாஜக வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. இது தொடர்பாக உங்களில் ஒருவன் பதில்கள் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது: சிறுபான்மை சமூகத்தினர் மீதான வன்மம்தான் இதன் மூலம் வெளிப்படுகிறது. தேர்தல் அரசியல் லாபங்களுக்காக உள்துறை அமைச்சர் இவ்வாறு சொல்லியிருக்கிறார். இசுலாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திபடுத்தும் என பாஜகவினுடைய தலைமை அவர்களாகவே கற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மை அப்படியில்லை. பாஜகவிற்கு வாக்கு அளிக்காத பெரும்பான்மையான மக்களும் இந்துக்கள்தான். ஆனால் அவர்கள் அமைதியையும், சகோதரத்துவத்தையும் விரும்புகின்ற மக்கள்.
பாஜக தன்னுடைய வெறுப்புணர்ச்சியை குறிப்பிட்ட சிலரிடம் திணித்து, அதுதான் ஒட்டுமொத்த மக்களின் மனநிலை என காட்ட நினைக்கிறது. அதற்கு துணையாக இருக்கிறது, பொய்களையும் கற்பனைக் கதைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கிற பரப்புரை இயந்திரமாக சமூக ஊடகங்களில் செயல்படுகிற பாஜக ஆதரவு கணக்குகள்.

பாஜகவினுடைய ஊது குழலாக மாறி, ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதை மறந்து பாஜகவை தாங்கி பிடிக்கிற சில ஊடகங்கள், இப்படியான சில காரணிகள் மூலம் தன்னுடைய வெறுப்பு அரசியலை பாஜக செய்து கொண்டிருக்கிறது. மதசார்பின்மையை அரசியலமைப்பு நெறிமுறையாக கொண்ட நாட்டில் உள்துறை அமைச்சரே இவ்வாறு பேசுவது அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிற செயல்!
மக்கள் எல்லாவற்றைய்ம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! கோயபல்ஸினுடைய பொய்கள் நாஜிகளுக்கு. ஆனால் உண்மை மக்களுக்கு! இதுதான் வரலாறு சொல்கின்றன பாடம். நாங்கள் மக்களை நம்புகிறோம். இந்திய மக்களுடைய மனசாட்சி என்றைக்கும் உறங்கிவிடாது என்று நம்புகிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications