ரோஹித்துக்கு முட்டுக்கட்டை போடும் டிராவிட்? யூத் வீரரை கொண்டு வர பிளானா? கலர் மாறும் இந்திய அணி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி; இந்திய டி 20 அணியின் கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2021 டி 20 உலகக் கோப்பையில் மோசமாக ஆடி இந்திய அணி செமி பைனல் செல்லாமல் வெளியேறி உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்துள்ளார்.

டி 20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து மட்டும் கோலி ராஜினாமா செய்துள்ளார்.

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டன்

இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலும் ரோஹித் சர்மாதான் கேப்டன் ஆவார் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. அடுத்த வருடம் டி 20 உலகக் கோப்பை இருப்பதால் ரோஹித் சர்மாதான் கேப்டன்சிக்கு சிறந்த சாய்ஸ். அனுபவம் இல்லாத கேப்டனை கொண்டு வந்து அவரை 1 வருடத்திற்குள் பழக்கப்படுவதற்கு பதிலாக மூத்த வீரர் ரோஹித் சர்மாவை கேப்டனாக்குவதே நல்ல சாய்சாக இருக்கும்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ஆனால் இந்திய அணியின் புதிய கோச் ராகுல் டிராவிட் இதற்கு அனுமதி தர மாட்டார் என்றே கூறப்படுகிறது. பிசிசிஐ வட்டார தகவல்களின்படி இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் ஒருவர் வருவதே சரியாக இருக்கும் என்று அவர் நம்புவதாக தெரிகிறது. வெறும் அடுத்த வருட உலகக் கோப்பைக்காக ரோஹித்தை கேப்டனாக்க முடியாது. அவருக்கு வயதாகிவிட்டது. அடுத்த வருடத்திற்கு பின் மீண்டும் கேப்டனை மாற்ற முடியாது.

இளம் வீரர்

இளம் வீரர்

இதனால் இப்போதே நேரடியாக இளம் வீரரை கொண்டு வர வேண்டும் என்று டிராவிட் நினைப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் டிராவிட் இளம் வீரர்களுக்கு மதிப்பு தருபவர். அதன்படி 4 இளம் வீரர்கள் ரேசில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதில் டாப்பில் இருப்பவர் கே. எல். ராகுல். கே. எல் ராகுல் இளம் வீரர், நல்ல டி 20 கேப்டன். அதோடு டிராவிட்டோடு கர்நாடகாவில் கிரிக்கெட் ஆட்டங்களில் நேரடியாக பயிற்சி பெற்ற அனுபவம் உள்ளவர்.

ராகுல்

ராகுல்

ராகுலின் கிரிக்கெட் கெரியரில் டிராவிட் முக்கிய பங்கு வகிக்க கூடியவர். முக்கியமாக டி 20, ஒருநாள் அணிகளில் நல்ல கேப்டனாக வரும் அனைத்து வாய்ப்பும் இவருக்கு உள்ளது. இதனால் கே எல் ராகுலுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. இவர் போக ராகுல் டிராவிட்டின் நேரடி புரொடெக்ட் என்று பார்த்தால் அது ஷ்ரேயேஸ் ஐயர். அண்டர் 19 போட்டிகளிலேயே ஷ்ரேயேஸ் வளர்ச்சி அடைய டிராவிட்தான் காரணமாக இருந்தார்.

ஷ்ரேயேஸ் ஐயர்

ஷ்ரேயேஸ் ஐயர்

ஷ்ரேயேஸ் ஐயர் என்ற வீரரை உருவாக்கியதில் டிராவிட்டிற்கு அதிக பங்கு உள்ளது. டெல்லி கேப்டனாகவும் ஐபிஎல்லில் ஷ்ரேயேஸ் சிறப்பாக செயல்பட்டார். அந்த அணியை 2020ல் பைனல் வரை கொண்டு வந்தார். இதனால் அவரும் ரேஸில் இருக்கிறார். இவர்கள் இருவர்தான் இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார்கள். இவர்கள் போக டிராவிட் அண்டர் 19 அணியில் உருவாக்கிய இன்னொரு அதிரடி வீரர் பண்டும் கேப்டன்சி தகுதி கொண்டவராக பார்க்கப்படுகிறார்.

டெல்லி சீசன்

டெல்லி சீசன்

டெல்லி அணியை இந்த சீசனில் மிக சிறப்பாக வழி நடத்தினார். அண்டர் 19ல் பண்டை மெருகேற்றியது டிராவிட்தான். இதனால் அவரும் கேப்டன்சிக்கான லிஸ்டில் இருக்கிறார். இதெல்லாம் போக நீண்ட கால கேப்டன் ஆப்ஷனாக இஷான் கிஷான் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இஷான் கிஷான் இளம் வீரர். வரும் ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு உள்ளவராக இஷான் கிஷான் கருதப்படுகிறார்.

தோனி

தோனி

இந்திய அணி மூத்த வீரர்கள் இருந்த போது.. தோனியை எப்படி இளம் வயதிலேயே கேப்டனாக அறிவித்ததோ, அதேபோல் இஷான் கிஷானை ராகுல் டிராவிட் டிக் அடிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இவரிடம் அதற்கான தலைமை பண்புகளும் உள்ளன. ரோஹித் தவிர்த்து இவர்கள் நான்கு பேரும்தான் தற்போது கேப்டன்சி ரேஸில் இருக்கிறார்கள். இதில் ராகுல், ஷ்ரேயேஸ் ஆகியோருக்கு இடையில் அதிக போட்டி நிலவுகிறது. இன்று நியூசிலாந்து தொடருக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. இன்று இந்திய அணியின் மொத்த கலரும் மாறும் வாய்ப்புகள் உள்ளன.. இந்திய அணியின் புதிய கேப்டன் யார் என்பதற்கான விடை இன்று பெரும்பாலும் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+