கொடூரத்தின் உச்சம்! 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 15 ஆண்கள்.. டெல்லி ஸ்பாவில் அதிர்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் 14 வயதான சிறுமி ஒருவர் அளித்துள்ள பாலியல் பலாத்கார புகார் தேசத்தின் தலைநகரையே அதிர வைத்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மைனர் சிறுமிகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகமாகவே உள்ளது.

இந்தச் சூழலில் தலைநகர் டெல்லியில் 14 வயதான சிறுமி ஒருவர் அளித்துள்ள பாலியல் பலாத்கார புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பலாத்காரம்

பலாத்காரம்


அங்கு இயங்கி வரும் ஸ்பா ஒன்றில் பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி புகார் அளித்துள்ளார். அங்கு வருவோருடன் உடலுறவு வைத்துக்கொள்ள ஸ்பா உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தியதாக அந்த சிறுமி தனது புகாரில் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஸ்பா ஆபரேட்டர், ஒரு பெண் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுமி

சிறுமி

இது தொடர்பாக ஏற்கனவே ஒருமுறை போலீசாரிடம் புகார் அளித்தாகவும் இருப்பினும் அப்போது ​​குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரூபலை தான் காதலிப்பதாகப் பொய் சொல்லச் சொல்லி மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் வேறுவழியின்றி அப்படிச் சொல்லி புகாரை வாபஸ் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய அவர், இப்போது பெற்றோரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதால் புகார் அளித்தாகவும் அவர் தெரிவித்தார்.

 பரபர புகார்

பரபர புகார்

குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும், தன்னையும் குடும்பத்தாரையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது வயது குறித்து ஆதாரத்தைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் இதனால் அவர் மைனர் சிறுமி தானே என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

 டெல்லி ஸ்பா

டெல்லி ஸ்பா

சிறுமி அளித்த புகாரின்படி, "நான் செக்டார் 49இல் வசித்து வருகிறார். வேலை தேடிக் கொண்டிருந்த போது, ஒரு மாதத்திற்கு முன்பு பூஜா என்ற பெண்ணை சந்தித்தேன். அவர் முதலில் மருத்துவ கிளினிக்கில் வேலை வாங்கி தந்தார். ஆனால், இரு நாட்களிலேயே வேலையில் இருந்து என்னைத் தூக்கிவிட்டனர். பின்னர் 15 நாட்கள் கழித்து மீண்டும் பூஜாவை சந்தித்தேன். அவர் இந்த முறை ஓமாக்ஸ் குருகிராம் மாலின் உள்ள கிங் ஸ்பாவில் வேலை வாங்கி தந்தார்.

 மிரட்டல்

மிரட்டல்

அந்த ஸ்பா தனது அத்தை உடையது என்று பூஜா கூறினார். முதல் நாளே என்னைக் கட்டாயப்படுத்தி மசாஜ் சென்டருக்கு அனுப்பினார்கள். அங்கு ஒருவன் என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தான். அப்போதே நான் வேலையை விட்டு விடலாம் என இருந்தேன். ஆனால், பலாத்காரத்தை வீடியோ எடுத்து வைத்திருந்த அந்தப் பெண், வேலையை விட்டுவிடக் கூடாது என மிரட்டினார்.

 10 முதல் 15 ஆண்கள்

10 முதல் 15 ஆண்கள்

அடுத்த 5 நாட்களுக்கு வேலைக்குச் சென்றேன். ஒவ்வொரு நாளும் 10 முதல் 15 ஆண்கள் என்னைப் பலாத்காரம் செய்தனர். இது குறித்து என் அம்மாவிடம் சொன்னேன். பின்னர் நான் வேலையை விட்டுவிட்டேன். ஆனால், அதன் பின்னரும் ஜூமா, பூஜா, ரூபெல் மற்றும் சதாம் என்னை விடவில்லை" என்று அவர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே, போலீசாரில் இது தொடர்பாகப் புகார் அளித்தாகவும் இருப்பினும், அப்போது தன்னை பொய் சொல்லக் கட்டாயப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

 மீண்டும் புகார்

மீண்டும் புகார்

அதேநேரம் இப்போது பெற்றோரைக் கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் இதனால் புகார் அளித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். மேலும், அந்த கும்பல் அப்பாவி பொதுமக்களைக் குறி வைத்து பலாத்காரம் செய்வதாகவும் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாகப் பெண் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணை நடந்து வருவதாகவும் விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+