வந்தே பாரத் ரயில்... சீனாவுக்கு பலத்த அடி... டெண்டர் ரத்து செய்தது... மத்திய ரயில்வே!!
டெல்லி: வந்தே பாரத் ரயில்களுக்கு மின்சார உபகரணங்கள் வழங்குவதற்கு என்று கடந்தாண்டு சென்னை ஐசிஎப் டெண்டர் விட்டு இருந்தது. இந்த டெண்டரை மத்திய ரயில்வே ரத்து செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது. சீனா நிறுவனம் இந்த டெண்டரில் ஈடுபட்டதால் தடை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை ஐசிஎப்இல் வைத்து 16 பெட்டிகள் கொண்ட 44 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரிக்க கடந்தாண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதில் சீனாவைச் சேர்ந்த முக்கிய நிறுவனம் உள்பட ஆறு நிறுவனங்கள் பங்கேற்றன.

சீனாவைச் சேர்ந்த சிஆர்ஆர்சி யாங்ஜி எலெக்ட்ரிக் கம்பெனி லிமிட் இதில் பங்கேற்றது. இத்துடன் பாரத் ஹெவி எலெக்ட்ரானிக்ஸ் லிமிட், சாங்ரூர், எலெக்ட்ரோவேவ்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட், மேதா சர்வோ டிரைவஸ் பிரைவேட் லிமிட், பவர்நெட்டிக்ஸ் எக்குயிப்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிட் ஆகிய உள்நாட்டு நிறுவனங்களும் பங்கேற்றன. ஒரே ஒரு நிறுவனமாக சீன நிறுவனம் பங்கேற்று இருந்தது. இதையடுத்து இந்த டெண்டரை மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வே பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், ''44 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க விடப்பட்டு இருந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் புதிய திருத்தப்பட்ட விதிகளுடன் டெண்டர் அறிவிக்கப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளது.
சிஆர்ஆர்சி யாங்ஜி எலெக்ட்ரிக் கம்பெனி லிமிட் உடன் அரியானாவில், குருகிராமில் இருக்கும் பயனீர் பில் மெட் பிரைவேட் லிமிடெட்டும் டெண்டரில் பங்கேற்று இருந்தது. இந்த டென்டரில் சீன நிறுவனம் பங்கேற்காத வகையில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து, சீனாவின் மீது மிகவும் கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் எந்த அண்டை நாடுகளும் தொழில் தொடங்க வேண்டுமானால் அல்லது முதலீடு செய்ய வேண்டுமானால் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
சீனாவில் இருந்து சூரிய மின்சக்தி உபகரணங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் டிக் டாக் உள்பட 59 சீன ஆப்கள் தடை செய்யப்பட்டன. கொரோனா பரிசோதனைக்கு என்று தெர்மல் கேமரா தயாரிக்க ஏற்கனவே சீன நிறுவனம் டெண்டர் எடுத்து இருந்தது. இதை ரயில்வே தடை செய்துள்ளது. மேலும் 470 கோடி மதிப்பிலான சரக்கு நடைபாதைக்கான டெண்டரையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications