மொத்தம் 10 பேர்.. பரபரத்த 60 மணி நேர ஐடி ரெய்டு.. இந்திய ஊழியர்களுக்கு பிபிசியின் மேஜர் தகவல் இதுதான்
வருமான வரித்துறையினர் நடத்திய 60 மணி ரெய்டு முடிவடைந்துள்ள நிலையில், இது தொடர்பான அறிக்கை இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: கடந்த 14ம் தேதி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் தொடங்கிய வருமான வரித்துறையினரின் ரெய்டு 60 நேரத்திற்கு பின்னர் ஒருவழியாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது பிபிசி தனது ஊழியர்களுக்கு முக்கிய செய்தியை அனுப்பியுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பிரிட்டனின் வெளியுறவுத்துறை ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிபிசி India: The Modi Question எனும் ஆவணப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டது. ஆனால் இப்படடித்திற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் புகழை கெடுக்கும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியது.
இதனையடுத்து இப்படத்தை தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ன் கீழ் தடை செய்தும் உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த தடை உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இருப்பினும் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற தளங்களிலிருந்து இப்படம் நீக்கப்பட்டது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் இப்படத்தை திரையிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன. கேரளாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மாணவர்களால் படம் திரையிடப்பட்டது.

ஆவணப்படம்
கேரளாவில் பொதுவெளியில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் போட்டிப்போட்டுக்கொண்டு இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். இது ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்க மறுபுறம் டெல்லி மற்றும் மும்பையில் இருந்த பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 'சர்வே' எனப்படும் ரெய்டை மேற்கொண்டனர். ஏற்கெனவே இந்த ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ரெய்டு நடத்தியிருப்பது எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த ரெய்டுக்கு முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ரெய்டு
காங்கிரஸ், ஆம் ஆத்மியும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தது. ரெய்டு காரணமாக பிபிசி அலுவலகத்தில் சுமார் 10 ஊழியர்கள் 60 மணி நேரமாக தங்கியிருந்தனர். விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், கம்யூட்டரிலிருந்து செல்போன் வரை அனைத்தையும் அவர்கள் அணுக அனுமதிக்க வேண்டும் என பிபிசி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த ரெய்டு நேற்று இரவு சுமார் 11 மணியளவில் முடிவுக்கு வந்தது. ரெய்டில் ஊழியர்கள் முழுமையான ஒத்துழைப்பை கொடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இரண்டாவது மெமோ
இந்நிலையில் பிபிசி தனது ஊழியர்களுக்கு ஒரு தகவலை அனுப்பியுள்ளது. அதாவது, "இந்த சம்பவங்கள் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் அழுத்தத்தையும், வருதத்தையும் தரும் அனுபவமாக தொடர்கிறது என்பதை நாங்கள் அறிகிறோம். ரெய்டு முடிந்த பின்னர் தொடர்புகொள்கிறோம். அதேபோல ஊழியர்கள் சோஷியல் மீடியாவிலிருந்து விலகி இருப்பதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில் இதில் ரெய்டு குறித்து உண்மைக்கு மாறான செய்திகள் பல வலம் வருகின்றன. எனவே இந்த தவறான செய்தியின்பால் தூண்டப்பட்டு புகார் ஏதும் அளிக்கக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

துணையாக இருக்கிறோம்
நாங்கள் ஊழியர்களான உங்களுக்கு முழு ஆதரவை அளிக்கிறோம். உங்களில் சிலர் நீண்ட கேள்வியை எதிர்கொண்டுள்ளனர். சிலர் இரவு முழுவதும் அலுவலகத்திலேயே தங்க வைக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை இயல்புக்கு திரும்பியுள்ளது. எனவே இந்தியாவிலும், அதற்கு அப்பாலும் உள்ள மக்களுக்கு சேவை செய்ய தயராக இருப்போம். பிபிசி ஒரு நம்பகமான சுதந்திரமான ஊடக அமைப்பு. மேற்குறிப்பிட்டதைப்போல நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு முற்றிலும் துணையாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications