Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவரை வெளியே அனுப்புங்க.. குறுக்கே பேசிய வக்கீல்! கடுப்பான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்ற போது தான் தான் மூத்த வழக்கறிஞர் என அடிக்கடி குறுக்கிட்டவாறு பேசிய மூத்த வழக்கறிஞரான மேத்யூஸ் நெடும்பாறையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கடுமையாக எச்சரித்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், "அவரை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றுங்கள்" என கோபத்தை வெளிப்படுத்தினார்.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் முறையீடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் பல்வேறு நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.

Supreme Court DY Chandrachud

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் டிஒய் சந்திரசூட் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மூத்த வழக்கறிஞரான நரேந்திர ஹூடா நீதிமன்றம் முன் தனது வாதங்களை எடுத்து வைத்தார்.

அப்போது வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கேள்வி ஒன்றை எழுப்பினர். அப்போது அங்கு இருந்த மூத்த வழக்கறிஞரான மேத்யூஸ் நெடும்பாறை,"மூத்த வழக்கறிஞரான நான் ஒன்று கருத்தை கூற வருகிறேன்.. இந்த நீதிமன்றத்தின் இருக்கும் அனைத்து வழக்கறிஞர்களை காட்டிலும் நான்தான் மூத்தவர்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட்,"நரேந்திர ஹுடா வாதத்தை முடித்த பிறகு நீங்கள் பேசலாம்" என்றார். ஆனால் அதனை கேட்காத நெடும்பாறை,"என்னை நீங்கள் மதிக்காவிட்டால் நீதிமன்றத்தை விட்டு வெளியேறி விடுவேன்" என்றார்.

இதனால் கோபமடைந்த நீதிபதி சந்திரசூட்,"இது உங்களுக்கு எச்சரிக்கை.. நீதிபதிகளிடம் இப்படி பேசக்கூடாது.. இந்த நீதிமன்றத்திற்கு நான் தான் பொறுப்பு. செக்யூரிட்டிகள் உடனடியாக அவரை இங்கிருந்து அகற்றுங்கள்" என எச்சரித்தார்.

அப்போது நெடும்பாறை," நானே இங்கிருந்து செல்கிறேன்" என பதில் அளித்தார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி சந்திர சூட்," நீங்கள் போகலாம்.. ஆனால் அதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறை நான் பார்த்திருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஒருபோதும் ஆணையிட அனுமதிக்க முடியாது" என்றார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட மேத்யூஸ் நெடும்பாறை," நான் 1979 ஆம் ஆண்டிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

இதனால் மேலும் கோபமான சந்திரசூட்," நெடும்பாறை தொடர்ந்து இதேபோல் பேசினால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்" என எச்சரித்தார். இதை அடுத்து அங்கிருந்து வெளியேறிய மேத்யூஸ் நெடும்பாறை பிறகு மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்தார். "நான் எந்த தவறும் செய்யவில்லை.. தலைமை நீதிபதியை அவமதித்ததற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் ..எனக்கு அநீதி இழைக்கப்பட்டது" என்றார்.

உச்சநீதிமன்றத்தில் நெடும்பாரை தலைமை நீதிபதி சந்திரசூட்டுடன் சண்டையிடுவது இது முதல் முறை கிடையாது. கடந்த மார்ச் மாதம் இதேபோல நெடும்பாறை குறுக்கிட்டு பேசிய போது தலைமை நீதிபதி எச்சரித்தார். ஆனாலும் அவர் கேட்கவில்லை. இதனால் கோபம் அடைந்த தலைமை நீதிபதி "என்னிடம் கத்தி பேசக்கூடாது.. இது பார்க்கில் நடக்கும் கூட்டம் அல்ல.. நீங்கள் நீதிமன்றத்தில் இருக்கிறீர்கள்" என பேசினார். இந்த சம்பவம் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+