டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மறுபடியும் முதல்ல இருந்தா? 2வது 2500ஐ தண்டிய கொரொனா பாதிப்பு! மத்திய அரசு கொடுத்த முக்கிய எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு இரண்டாவது நாளக 2 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ள நிலையில், மத்திய அரசு குறிப்பிட்ட நில மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென எச்சரித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து பல வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 15 நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் முகக் கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

 அதிகரிக்கும் பாதிப்பு- மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்- ஊரடங்கு? முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை அதிகரிக்கும் பாதிப்பு- மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்- ஊரடங்கு? முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமையான நேற்று இரண்டாவது நாளாக 2,500 என்ற எண்ணிக்கையை தாண்டியது. 24 மணி நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மொத்தம் 2,593 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இது சனிக்கிழமையன்று ஒரு நாள் முன்பு பதிவு செய்யப்பட்ட 2,527 நோய்த்தொற்றுகளை விட சற்றே அதிகமாகும். மொத்தம் 44 இறப்புகள் பதிவான நிலையில், இறப்பு எண்ணிக்கை 5,22,193 ஆக உள்ளது. மேலும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 15,873 ஆக உள்ளது.

மீண்டும் உயர்வு

மீண்டும் உயர்வு

இந்தியாவில் கடந்த வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் 2,000-க்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தது. இந்தியாவில் இந்த வாரம் 15,538 புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை 2,527 வைரஸ் வழக்குகளும், வெள்ளிக்கிழமை 2,541 வழக்குகளும், வியாழன் 2,380, புதன்கிழமை 2,067, செவ்வாய் 1,247 மற்றும் திங்கட்கிழமை 2,183 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது ஏப்ரல் 17ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில் பதிவாகியிருந்த எண்ணிக்கையை விட அதிகமாகும்.

டெல்லியில் அதிகரிப்பு

டெல்லியில் அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக டெல்லியில் 1,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை 1,083 கொரோனா பாதிப்பு 4.48 சதவிகிதம் நேர்மறை விகிதத்துடன் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் ஒருவர் நோயால் இறந்ததாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா சனிக்கிழமையன்று 194 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மார்ச் 25ஆம் தேதிக்கு பிறகு ஒரு நாளில் அதிகபட்ச பதிப்பு ஆகும். ஒரு இறப்பும் பதிவாகியுள்ளது, இறப்பு எண்ணிக்கை 1,47,832 ஆக உள்ளது என்று சுகாதார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை நாட்டில் வளர்ந்து வரும் கோவிட் -19 நிலைமை குறித்து முதலமைச்சர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சந்திப்பை நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுக்க, கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 10 கோடி டோஸ் கோவிஷீல்டைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இவில்லை என்றால், உயிர்காக்கும் தடுப்பூசிகள் வீணாகிவிடும் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு அந்நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. .

Recommended Video

    சென்னை: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!
    தடுப்பூசி எண்ணிக்கை

    தடுப்பூசி எண்ணிக்கை

    சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி-எம்) மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 60ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை ஒரு நாள் முன்பு 55 ஆக இருந்தது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் கவனாமாக இருக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா தடுப்பூசி கவரேஜ் 187.67 கோடியை (1,87,67,20,318) தாண்டியுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    English summary
    With the daily daily incidence of corona in India exceeding 2,500, the central government has warned states and districts to be vigilant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X