5 மாநில தேர்தல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன - சுஷில் சந்திரா
பஞ்சாப் உத்தரகண்ட் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் தலைமை ஆணையர் சுஷில் சந்திரா வெளியிட்டு , கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரித்து வருகிறார்.
கோவா பஞ்சாப் மணிப்பூர் உத்தராகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்தாண்டு கொரோனா 3வது அலை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுபாடுகளுடன் தேர்தலை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமையகமான நிர்வாசன் சதனில் தலைமை தேர்தர் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும். கூடுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும் என்று சுஷீல் சந்திரா கூறியுள்ளார். கொரோனா பரவாத வகையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார்.
5 மாநிலங்களில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனா, ஓமிக்ரான் பரவும் சூழ்நிலையில் சட்டசபைத் தேர்தல் நடத்துவது சவாலானது என்றும் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கள ஆய்வின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுகிறது.
மேலும் ஒரு வாக்குச்சாவடியில் 1250 முதல் 1500 பேர் வரை மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், பெண் வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் ஆன்லைன் வாயிலாகவும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் சுஷில் சந்திரா கூறியுள்ளார்.
வாக்குப் பதிவு மையங்களில் சானிடைசர்கள், மாஸ்க்குகள் தயார் நிலையில் இருக்கும் எனவும், உ.பி., பஞ்சாப், ஜார்கண்ட் மாநிலங்களில் வேட்பாளர்கள் தலா 40 லட்சம் வரை செலவிடவும், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வேட்பாளர் தலா 28 லட்சம் வரை செலவிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது எனவும் என கூறிய அவர், இ விஜில் என்ற செயலியில் பொதுமக்கள் தங்கள் புகார்களை அளிக்கலாம் என கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் அட்டவணைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து 5 மாநிலங்களிலும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும்,
தேர்தல் வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது எனவும், தேர்தல் நடத்தை வழிகாட்டுதல்களை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications