டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவை காலி செய்யப்போறதே ஓமிக்ரான்தானாம்.. 4வது அலைக்கு வாய்ப்பில்லை ராஜா: மருத்துவ நிபுணர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி : ஓமிக்ரான் தொற்று பரவல் கொரோனாவுக்கு முடிவு கட்டும் என புனேவைச் சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவ நிபுணரான நரேஷ் புரோஹித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

ஓமிக்ரான் இப்போது இந்தியாவில் சமூகப் பரவலாக மாறிவிட்டது எனவும், குறிப்பாக நாட்டில் உள்ள பல்வேறு பெருநகரங்களில் ஓமிக்ரான் கொரோனா தான் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இதனால் தான் பெரு நகரங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா 3வது அலை சீக்கிரம் முடிஞ்சுடுமோ..! இந்தியாவில் தொடர்ந்து சரியும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கொரோனா 3வது அலை சீக்கிரம் முடிஞ்சுடுமோ..! இந்தியாவில் தொடர்ந்து சரியும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064 புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையான 3.33 லட்சத்தை விட சுமார் 30 ஆயிரம் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக 439 புதிய இறப்புகளும் பதிவாகியுள்ள நிலையில் இந்த அளவும் நேற்றைய எண்ணிக்கையை விட குறைவாகும். தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் வைரஸ் தொடர்பான இறப்பு எண்ணிக்கையை 4,89,848 ஆக அதிகரித்துள்ளனது.

கொரோனாவுக்கு முடிவு

கொரோனாவுக்கு முடிவு

இந்த நிலையில் ஓமிக்ரான் தொற்று பரவல் கொரோனாவுக்கு முடிவு கட்டும் என புனேவைச் சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவ நிபுணரான நரேஷ் புரோஹித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு முதன்மை ஆய்வாளரான டாக்டர் புரோஹித், கோவிட்-19 மற்றும் ஸ்பானிஷ் காய்ச்சலுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டி தனது கருத்தினை உறுதிபட கூறியுள்ளார். ஓமிக்ரான், வைரஸின் புதிய மாறுபாடு, சார்ஸ்-கோவி-2, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு உலகைத் தாக்கிய மற்றொரு தொற்றுநோயான ஸ்பானிஷ் ஃப்ளூ போல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சல்

ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சல்

1918 மற்றும் 1920ல் பரவி உலக மக்கள்தொகையில் 35 சதவீதத்தை பாதித்த ஸ்பானிஷ் ப்ளூ, சில வேறுபாடுகளைத் தவிர, இந்தியாவைப் பொருத்தவரையில் ஸ்பானிஷ் ஃப்ளூ மற்றும் கொரோனா வைரஸுக்கு நிறைய பொதுவான தன்மைகள் உள்ளதாகவும், இந்த பொதுவான தன்மைகளின் அடிப்படையில், புதிய மாறுபாடு வைரஸான ஓமிக்ரானின் வருகை கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக வாய்ப்பு இருந்தாலும், பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வரும் எனக் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் மற்றும் ஸ்பானிஷ் ஃப்ளூ ஆகிய இரண்டு பாதிப்புகளிலும் முதல் இரண்டு அலைகளும் ஒரே மாதிரியான தொற்று வடிவத்தைக் காட்டியதாக புரோஹித் கூறியுள்ளார்.

Recommended Video

    Omicron 5 New Symptoms | AIIMS Delhi | Oneindia Tamil
    4வது அலை இல்லை

    4வது அலை இல்லை

    முதல் அலை லேசானது, ஆனால் இரண்டாவது அலை மிகப்பெரியது மற்றும் ஆபத்தானது என கூறியுள்ள அவர், இரண்டு அலைகளுக்குப் பிறகு, ஸ்பானிஷ் காய்ச்சலின் வைரஸ் மாற்றமடைந்து மிகவும் லேசானதாக மாறியது எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் மட்டுமே தோன்றும் என்றார். அதேபோல் தான் தற்போதும் நிகழ்வதால், இனி இந்தியாவில் நான்காவது அலை இல்லை எனவும், மருத்துவ முன்னேற்றம் மற்றும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நோய் பரவலை வெகுவாக குறைக்கும் எனவும் மருத்துவர் நரேஷ் புரோஹித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    English summary
    Naresh Purohit, an epidemiologist from Pune, hopes that Omigron will put an end to the spread of corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X