Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்னைக்கு.. உண்டியலை உடைச்சு மோடிக்கு பணம் தந்தாளே என் மகள்.. ஆக்சிஜனுக்கு போராடுறாளே.. கதறும் தந்தை

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் லக்னோ திணறுகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "அன்னைக்கு என் மகள் பிஎம் கேருக்கு உண்டியல் காசை எடுத்து அனுப்பினாளே.. இன்னைக்கு ஆக்ஸிஜன் இல்லாமல் தவிக்கிறாள்.. நீங்கதான் உதவ வேண்டும்" என்று பிரதமர் மோடியிடம் நிர்க்கதியாய் நிற்கும் தந்தை கதறி அழுது உதவி கேட்டுள்ளார்.

Recommended Video

    டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை... 20 பேர் பலி.. 200 பேரின் உயிர் கேள்விக்குறி!

    கடந்த வருடம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த சமயம், பிஎம் கேர் நிதிக்கு, ஏராளமான பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் மனமுவந்து பண உதவிகளை செய்திருந்தனர்.. அந்த வகையில், சிறுமி ஒருத்தியும் நிதியுதவி செய்திருந்தாள்..

    தான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த பணத்தை, உண்டியலை உடைத்து பிஎம் கேர் நிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.. இந்த சிறுமி வடமாநிலத்தை சேர்ந்தவர் போலும். ஆனால், எந்த ஊர் என்று சரியாக தெரியவில்லை.

    ஆக்சிஜன்

    ஆக்சிஜன்

    இப்போது இந்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.. ஆனால், ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.. இது சம்பந்தமாக செய்தியாளர்களிடமும் தன்னுடைய நிலைமையை சொல்லி விளக்கி உள்ளார். இந்நிலையில், இந்த பெண்ணின் தந்தை, பிரதமர் மோடியிடம் கதறி கொண்டே ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்..

    உண்டியல்

    உண்டியல்

    "என்னுடைய மகள் பிஎம் கேர் நிதிக்காக தான் சேர்த்து வைத்த பணத்தை உண்டியலை உடைத்துக் கொடுத்தாள்... ஆனால், இன்னைக்கு அவள் ஆக்சிஜன் கிடைக்காமல் போராடுகிறாள். அவளுக்கு ஆக்சிஜன் வேண்டும்... பிரதமர் தான் ஆக்சிஜன் கொடுத்து உதவ வேண்டும்" என்று கதறுகிறார். பிரதமரிடம் நிவாரண நிதியை மனசார தந்து உதவிய, பெண்ணுக்கே இந்த நிலைமையா? என்ற வேதனை நம்மை பிசைந்தெடுக்கிறது.

     வேண்டுகோள்

    வேண்டுகோள்

    கடந்த வருடம், கொரோனா பாதிப்பைத் தடுப்பு பணிகளுக்கு நிதி திரட்ட "பிஎம் கேர்" என்ற நிதியுதவிக் கணக்கு தொடங்கப்பட்டது. கொரோனாவால் நாடு தத்தளித்தபோது, பிரதமர் மோடி ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.. "நெருக்கடியான தருணத்தில் எல்லாருமே தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.. பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று எத்தனையோ சினிமா நடிகர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற வரை உதவி செய்தனர்.

    தகவல்

    இதையடுத்து, இந்தத் திட்டத்தின் கீழ் எவ்வளவு நிதி பெறப்பட்டது, எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது... ஆனால், "இது மத்திய அரசின் பொதுத் திட்டம் கிடையாது. எனவே, தகவல்களை வெளியிட முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+