ராகுலுக்கு எதிராக சோனியாவுக்கு கடிதம்...கட்சியை கலங்க வைத்த அந்த 4 பேர்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை யார் ஏற்பது என்பதில் போட்டா போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சோனியா காந்தி தெரிவித்து இருப்பதாகவும். இன்று அவர் விலகுவார் என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Recommended Video

    Congress செயற்குழு கூட்டம்.. முடிவுக்கு வருமா குழப்பம்?

    காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு ராகுல் காந்தி விரும்பவில்லை, பிரியங்கா காந்தி தயாராக இருந்தாலும் அவர் மீது தற்போது கட்சியின் பார்வை விழவில்லை என்று உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    The leaders from Congress wrote the letter to Sonia Gandhi against Rahul Gandhi

    காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு ராகுல் காந்தி வருவதை சில தலைவர்கள் விரும்பவில்லை என்றும் அவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரியானா முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடா, கபில் சிபல், ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் ஆகியோர் ராகுல் மீது வெறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் காலம் காலமாக காங்கிரஸ் தலைமைக்கு குலாம் நபியும், ஆனந்த் சர்மா, கபில் சிபல் நெருக்கமாக இருந்து வருகின்றனர்.

    கடந்த ஆறு ஆண்டுகளாக தன்னை ராகுல் காந்தி மதிப்பதில்லை என்று ஹூடா தெரிவித்துள்ளார். சோனியாவுக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரியுடன் குலாம் நபி ஆசாத்தின் ராஜ்ய சபை பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில், மல்லிகார்ஜுனே கார்கேவை ராஜ்ய சபைக்கு தலைமை கொண்டு வந்துள்ளது. இதை குலாம் நபி விரும்பவில்லை. ராஜ்ய சபையின் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கார்கேவுக்கு வழங்கப்பட்டு இருப்பதை குலாம் நபி விரும்பவில்லை, அங்கும், அவர் ஓரம் கட்டப்பட்டார்.

    இதேபோல், கார்கேவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதை ஆனந்த் சர்மாவும் விரும்பவில்லை. இவர் ஒருபோதும் இவரது சொந்த மாநிலமான இமாசலப்பிரதேசத்தில் நேரடியாக தேர்தல் களத்தில் நிற்கவில்லை. இவரும் தற்போது விரக்தியில் இருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+