Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவிலேயே அதிக லோக்சபா தொகுதிகளை இழக்க போகும் மாநிலம் தமிழ்நாடு.. உபி தான் டாப் கெயினர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக 2026க்கு பிறகு மிகப்பெரிய பரிசு தமிழகத்திற்கு கிடைக்க போகிறது. இந்தியாவிலேயே அதிக லோக்சபா தொகுதிகளை இழக்க போகும் மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான்.. அதேநேரம் இந்தியாவிலேயே அதிக லோக்சபா தொகுதிகளை கூடுதலாக பெறப்போகும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறப்போகிறது.

2026 க்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நடத்தப்படும் முதல் லோக்சபா தொகுதி எல்லை வரையறையில், அதிக லோக்சபா தொகுதிகளை பெறும் இந்திய மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. கார்னகியின் அறிக்கையின்படி, தற்போதைய மக்கள்தொகை வளர்ச்சிப்படி பார்த்தால் எட்டு முதல் 31 லோக்சபா தொகுதிகளை உத்தரப்பிரதேசம் பெற வாய்ப்பு உள்ளது.

The number of Lok Sabha seats that UP could gain and Tamil Nadu could lose after 2026 is as follows

Delimitation என்று அழைக்கப்படும் சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதி எல்லை நிர்ணயம் என்பது மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுவடிவமைக்கும் முக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது.

இந்த செயல்முறையின் படி பார்த்தால், பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப நியாயமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு ஒவ்வொரு தொகுதியும் தோராயமாக ஒரே எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு தான் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட உள்ளது.

அப்படி மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்ய மத்திய அரசும் முடிவு செய்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 800 இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதால், 2026ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு நாடாளுமன்றத்தில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.

தற்போதைய நிலையில்,இந்தியாவில் சில வட மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி தென்னிந்தியாவை விட வேகமாக உள்ளது. ஒப்பீட்டளவில் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி காரணமாக, லோக்சபா மறுவரையறைக்கு பின்னர், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கேரளா ஆகியவை கணிசமான அளவில் லோக்சபா தொகுதிகளை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதாவது மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மக்கள் தொகையை கட்டுப்படுத்த, பொறுப்புடன் செயல்பட்டதற்காக தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட போகின்றன என்பதே எதார்த்தம்.

நாட்டிலேயே அதிக மக்கள் தொகை உள்ள உத்தரப் பிரதேசத்தில் தற்போது 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஆனால் அதன் நாடாளுமன்றத் தொகுதிகள், லோக்சபா தொகுதி மறுவரையறைக்கு பின்னர் 11 இடங்கள் அதிகரித்து 91 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39 இல் இருந்து 31 ஆகக் குறையக்கூடும்.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டும் சேர்ந்து 42 இடங்களைக் கொண்டுள்ளன. இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 34 ஆக குறைய போகிறது. கேரளாவின் லோக்சபா பலம் 20ல் இருந்து 12 ஆகவும் குறையும். தமிழ்நாட்டை போல் கேரளாவும் எட்டு லோக்சபா தொகுதிகளை இழக்க வாய்ப்பு உள்ளது.. கர்நாடகாவும் தற்போதைய 28ல் இருந்து 26 ஆக குறைந்து, 2 இடங்களை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மொத்தமாக பார்த்தால் அதிக தொகுதிகளை பெற போகும் மாநிலங்களை இப்படி பார்க்கலாம். உத்தரப் பிரதேசம் (11), பீகார் (10), ராஜஸ்தான் (6), மற்றும் மத்தியப் பிரதேசம் (4) ஆகியவை முக்கியமான மாநிலங்கள் ஆகும். குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களும் 2026ம் ஆண்டு லோக்சபா மறுவரையறைக்கு பிறகு தலா ஒரு தொகுதிகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

மக்கள் தொகையின் படி பார்த்தால், நாட்டில் தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலம் தான் அனைத்து மாநிலங்களையும் விட மிகக் குறைவான லோக்சபா பிரதிநிதித்துவம் கொண்ட மாநிலமாக பார்க்கப்படுகிறது. நாட்டிலேயே அதிகமான மக்கள் தொகையும் அதிகமான லோக்சபா தொகுதிகள் இருந்த போதியலும்,. ஒரு எம்.பி.க்கான மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாட்டைவிட மிக அதிகமாக உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 30 லட்சம் பேருக்கு ஒரு எம்பி என்கிற நிலை உள்ளது. தமிழகத்தில் 18 லட்சம் பேருக்கு ஒரு எம்பி என்கிற நிலை உள்ளதாம். தற்போது வரை லோக்சபா தொகுதிகளின் எல்லை நிர்ணயம் முடக்கப்பட்டிருக்கிறது. லோக்சபா எம்பிக்களின் எண்ணிக்கை 545 ஆகும். 1976ல், எல்லை நிர்ணய நடவடிக்கையை 2000 வரை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. ஆனால், 2001ல், அந்த தடை 2026 வரை நீட்டிக்கப்பட்டது.

இப்போது, லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை மறுவரையறை என்பது 2026க்குப் பிறகான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அறிஞர் அலிஸ்டர் மெக்மில்லன் கூற்றுப்படி 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 7 குறைவான மக்களவைத் தொகுதிகள் இருந்திருக்க வேண்டும் என்றும், உத்தரப் பிரதேசம் 7 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்தமாக கார்னகி அறிக்கையின்படி பார்த்தால், லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை மறுவரையறைக்கு பிறகு, நான்கு வட மாநிலங்கள் (பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம்) கூட்டாக 22 இடங்களைப் பெறும், தமிழ்நாடு கேரளா ஆகியவை தலா 8 இடங்களை இழக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தென்மாநிலங்கள் எல்லாமே தொகுதிகளை இழக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+