காஷ்மீரை 3 குடும்பங்கள் கொள்ளையடித்தது.. அதை முடிவிற்கு கொண்டு வந்துள்ளோம்.. அமித் ஷா பொளேர்!
370-வது பிரிவு தரும் சிறப்பு அந்தஸ்து மூலம் 3 குடும்பங்கள்தான் ஜம்மு காஷ்மீரில் கொள்ளையடித்து வருகின்றன, அதை தற்போது முடிவிற்கு கொண்டு வந்துள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளா
Recommended Video
டெல்லி: 370-வது பிரிவு தரும் சிறப்பு அந்தஸ்து மூலம் 3 குடும்பங்கள்தான் ஜம்மு காஷ்மீரில் கொள்ளையடித்து வருகின்றன, அதை தற்போது முடிவிற்கு கொண்டு வந்துள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை வெளியிட்டு பேசிய அவர் காஷ்மீரில் இத்தனை வருடங்கள் நடந்த அரசியல் நிகழ்வுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்

என்ன பேச்சு
சட்டப்பிரிவு 370ஐ நீக்கிவிட்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தற்போது காஷ்மீரில் சட்டசபை இல்லை. அங்கு ஆட்சி கவிழ்ந்துவிட்டது. அதனால் சட்டப்பிரிவு 370ஐ நாடாளுமன்றத்தில்தான் நீக்க வேண்டும். இரண்டு அவைகளிலும் மெஜாரிட்டி வாக்குகள் மூலம் இந்த சட்டத்தை நீக்க வேண்டும்.

என்ன சொன்னார்
ஜம்மு காஷ்மீர் இத்தனை வருடங்களாக எந்த விதமான பலனும் பெறாமல் இருந்தது. அங்கு ஊழல் வளருவதற்கு அரசியல்வாதிகள் உதவிகொண்டு இருந்தனர். சட்டப்பிரிவு 370 காஷ்மீருக்கு எதிராக இருந்தது. அந்த மாநிலத்தை வளர விடாமல் தடுத்தது.

ஏன்
370 சட்டப்பிரிவு ஒருங்கிணைந்த இந்தியா என்ற கொள்கைக்கு எதிராக இருந்தது. இதனால் இன்று அதை நீக்க முடிவு செய்து இருக்கிறோம். லடாக் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தற்போது நிறைவேற்றி இருக்கிறோம்.இதற்கு முன்பே 1952, 1962ல் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

வாருங்கள்
அதனால் சபையில் எதிர்ப்பு தெரிவிக்காமல் விவாதிக்க வாருங்கள். எம்.பிக்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் தர தயாராக இருக்கிறோம். 370-வது பிரிவு தரும் சிறப்பு அந்தஸ்து மூலம் 3 குடும்பங்கள்தான் கொள்ளையடித்து வருகின்றன. அது இனி நடக்காது. அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்!











Click it and Unblock the Notifications