டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமித் ஷாவின் சாமர்த்தியம்.. ஆர்டிஐ மசோதா ராஜ்யசாபாவிலும் நிறைவேற்றம்.. எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ளது. ஏற்கனவே லோக்சபாவில் நிறைவேறிவிட்டதால் இந்த சட்டம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அவரது ஒப்புதலுக்கு பின் அமலுக்கு வரும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்டிஐ) சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி மத்திய மாநில தகவல் ஆணையர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைந்துள்ளது. மேலும் ஊதியம் உள்ளிட்ட விவகாரங்கள் என தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான அதிகாரங்கள் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது.

இந்த ஆர்டிஐ மசோதாவை லோக்சபாவில் தனிப்பெரும்பான்மை இருந்தாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் எளிதில் நிறைவேற்றியது.

ஆந்திராவில் அச்சடிக்கப்பட்ட பலகோடி ரூபாய் கள்ளநோட்டுகள் தமிழகத்தில் ஊடுருவல்.. அதிர்ச்சி தகவல் ஆந்திராவில் அச்சடிக்கப்பட்ட பலகோடி ரூபாய் கள்ளநோட்டுகள் தமிழகத்தில் ஊடுருவல்.. அதிர்ச்சி தகவல்

சம்மதித்த கேசிஆர்

சம்மதித்த கேசிஆர்

இந்நிலையில் ராஜ்யசபாவில் ஆர்டிஐ மசோதாவை நிறைவேற்ற போதிய பலம் பாஜக கூட்டணிக்கு இல்லை. இதையடுத்து இந்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தருமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்விடம் கேட்டார் . இதையடுத்து அவரது கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆதரவு அளித்தது.

கேசிஆர், ஜெகன் ஆதரவு

கேசிஆர், ஜெகன் ஆதரவு

இதேபோல் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவையும் ஆதரவு அளித்தன. இதன் காரணமாக ராஜ்யசபாவில் ஆர்டிஐ மசோதா நிறைவேறி உள்ளது.

ராஜ்யசபாவில் நிறைவேறியது

ராஜ்யசபாவில் நிறைவேறியது

ராஜ்யசபாவில் ஒரு மசோதாவை நிறைவேற்றுவதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவை தேவை என்ற நிலையில் பிஜூ ஜனதா தளம், பிடிபி, டி.ஆர்.எஸ். மற்றும் ஒய்.எஸ். ஆர். கட்சிகள் ஆதரவு அளித்ததால் ஆர்டிஐ மசோதாவுக்கு ஆதரவு எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது. இதன் காரணமாக ஆர்டிஐ மசோதா ராஜ்யசாவில் எளிதாக நிறைவேறியுள்ளது.

அமித்ஷா சாமர்த்தியம்

அமித்ஷா சாமர்த்தியம்

இந்நிலையில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்ச எம்பிக்கள் இந்த மசோதா நிறைவேறும் போது வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவை நிறைவேற எதிர்க்கட்சிளின் ஆதரவை மிக சாமார்த்தியமாக அமித் ஷா திரட்டியதே காரணம் என்கிறார்கள்.

English summary
he Right to Information Amendment Bill, 2019 passed by Rajya Sabha, Congress MPs stage walkout from Rajya Sabha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X