டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3வது அலையில் கொரோனா 60 % இறப்புகளுக்கு இதுதான் காரணமாம்.. டெல்லி ம்ருத்துவ நிபுணர்கள் கொடுத்த தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் தற்போது கொரோனா மூன்றாவது அலையில் ஏற்படும் உயிரிழப்புகளில் 60 சதவீதத்தினர் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுகொள்ளாதவர்கள் தான் என டெல்லி மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவ நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று உலகமெங்கும் பரவத் தொடங்கி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன

நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு இந்தியாவில் உயர்ந்து கொண்டே வருகிறது.. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்து வருகிறது. ஆறுதல் அளிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி காரணமாக பாதிப்பு தற்போது சற்றே குறைந்து வருகிறது.

நானியின் ஷ்யாம் சிங்கா ராய் படம் Dravidian Commercial Movie- சமூக வலைதளங்களில் கொண்டாட்டமான வரவேற்புநானியின் ஷ்யாம் சிங்கா ராய் படம் Dravidian Commercial Movie- சமூக வலைதளங்களில் கொண்டாட்டமான வரவேற்பு

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஓமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில நாட்களாக மாறி மாறி பதிவாகி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை 0.56 சதவீதம் குறைந்துள்ளது. இதில் ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட 10,050 பேரும் அடங்குவர்.

கொரோனா இறப்பு

கொரோனா இறப்பு

நேற்றைவிட இன்று பலியானோர் எண்ணிக்கை 525 அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் கொரோனா மூன்றாவது அலையில் ஏற்படும் மரணங்களுக்கு காரணம் குறித்து டெல்லி மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு ஆய்வு நடத்தினர். கடந்த 20ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை தற்போது அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில் மூன்றாவது அலையில் நிகழ்ந்துள்ள இறப்புகளில் 60 சதவீதத்தினர் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளவில்லை என்ற அதிர்ச்சித்தகவல் தான் அது.

இணை நோய்களால் மரணம்

இணை நோய்களால் மரணம்

மருத்துவமனை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கொரோனா மூன்றாவது அலையில் 60 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் என்றும் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக பாதிப்பு ,இதய நோய் ,நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் போராடி வந்தவர்களும் பலியாகி உள்ளதாக கூறியுள்ளனர் .மருத்துவமனையில் இறந்த 82 பேரில் 60 சதவீதம் பேர் தடுப்பூசி முழுமையாகவோ அல்லது ஒரு டோஸ் மட்டுமே போட்டுக் கொண்டவர்கள் என்றும் முதல் அலையில் இறப்பு சதவீதம் 7.2 சதவீதமாகவும் இரண்டாவது அலையில் 10.5 சதவீதமாகவும் மூன்றாவது அலையில் 6 சதவீதமாகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சிறுவர்களில் பாதிப்பு

சிறுவர்களில் பாதிப்பு

குறிப்பாக 40க்கும் மேற்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்ததாகவும் அவர்களில் இதுவரை இறப்பு பதிவாகவில்லை எனவும், இரண்டு பேர் வென்டிலேட்டர் வசதியுடனும் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றதாகவும் அந்த மருத்துவமனை கூறியுள்ளது. இதன்காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் இதய நோயுடன் போராடியவர்களும் மட்டுமே மூன்றாவது அலையில் உயிரிழந்திருப்பதாக ஏற்கனவே டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A study by Delhi Max Healthcare medical experts has revealed that 60 per cent of the deaths caused by the third wave of corona in India at present are those who have not been vaccinated with the first and second dose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X