கிறிஸ்துமஸ் கொண்டாட தடை.. எந்தெந்த நாடுகளில் தெரியுமா? லிஸ்ட்டில் சவூதி அரேபியா - வடகொரியா
டெல்லி: உலகில் அதிகமான மக்கள் பின்பற்றும் மதமாக கிறிஸ்தவம் உள்ளது. இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை இன்று உலகின் பல நாடுகள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் தான் உலகில் சில நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை உள்ளது. எந்தெந்த நாடுகளில் தடை உள்ளது? மீறி கிறிஸ்துமஸ் கொண்டாடினால் வழங்கப்படும் தண்டனை பற்றி இங்கே பார்க்கலாம்.
உலகம் முழுதும் அதிகமான மக்கள் பின்பற்றும் மதமாக கிறிஸ்தவம் உள்ளது. உலக மக்கள் தொகையில் 2.4 பில்லியன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகின்றனர். அதன்படி பார்த்தால் மொத்தம் 240 கோடி மக்கள் கிறிஸ்தவத்தை பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தான் இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை இன்று உலகின் பல்வேறு நாடுகள் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றன. நம் நாட்டிலும் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள சர்ச்சில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சில நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை உள்ளது. அந்த நாடுகள் எவை? எதற்காக தடை செய்துள்ளன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
சவூதி அரேபியா
சவூதி அரேபியா என்பது இஸ்லாம் மதத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனித பயணம் மேற்கொள்ளும் மெக்கா இங்கு தான் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இங்கு பிற மத பண்டிகைகள் என்பது ஊக்குவிக்கப்படுவது இல்லை. அதன்படி பொதுவெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் கிறிஸ்தவர்கள் வீட்டில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மீறினால் அங்குள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தஜிகிஸ்தான்
தஜிகிஸ்தான் முஸ்லீம் பெரும்பான்மையாக வசிக்கும் நாடாகும். இங்குள்ள மக்கள்தொகையில் 93 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். இந்த நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தஜிகிஸ்தானின் கல்வி அமைச்சகம், பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் விழா சார்ந்த நன்கொடைகள் வசூலிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
புருனே
தென்கிழக்கு ஆசிய நாடான புருனேவில் பொதுவெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு தடை உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல் இது நடைமுறையில் உள்ளது. இந்த உத்தரவை அந்த நாட்டின் சுல்தான் ஹனசனால் போல்கியா அறிவித்துள்ளார். இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில் தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்பது இஸ்லாமியர்களை வழிதவறி நடக்க வைத்துவிடும் என்பதற்காக பொதுவெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கிறிஸ்தவர்கள் தங்கள் வீட்டில் வைத்து கிறிஸ்துமஸ் கொண்டாடடலாம். ஆனால் அதற்குள் உரிய அனுமதி வாங்க வேண்டும். மீறினால் கிறிஸ்துமஸ் கொண்டாடும்பட்சத்தில் அதிகபட்சமாக 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.
சோமாலியா
கிழக்கு ஆப்பிரிக்க நாடாக சோமலியா உள்ளது. இங்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை உள்ளது. இந்த நாடும் ஒரு இஸ்லாமிய நாடாகும். இங்கும் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக உள்ளன. இதனால் கடந்த 2015ம் ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாட்டின் இஸ்லாமிய நம்பிக்கையை அச்சுறுத்துவதாக உள்ளதாக கூறி தடை விதித்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று அந்நாட்டு காவல்துறை, தேசிய பாதுகாப்பு உளவுத்துறை மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வட கொரியா
வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இந்த நாடு கடும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டது. அதோடு கிம் ஜாங் உன் சர்வாதிகாரியாக அறியப்படுகிறது. இந்த நாட்டில் பொதுமக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடவும் தடை உள்ளது. பொதுவாகவே வடகொரியா கம்யூனிச நாடாகவும், அங்குள்ள அரசு நாத்திக அரசாகவும் உள்ளது. அதோடு டிசம்பர் 25ம் தேதி என்பது கிம் ஜாங் உன்னின் பாட்டி பிறந்த தினமாகும். இதனால் அவருடைய பிறந்தநாளை கொண்டாட மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications