டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவர்கள்தான் தீர்த்து வைக்க போகிறார்கள்.. அயோத்தி பிரச்சனை.. தீர்வாக அமைய போகும் தமிழர்கள்!

அயோத்தி பிரச்சனையை தீர்க்கும் பொறுப்பு எதோ ஒரு வகையில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் வசம் வந்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தி பிரச்சனையை தீர்க்கும் பொறுப்பு எதோ ஒரு வகையில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் வசம் வந்து இருக்கிறது. தமிழகத்தில் பிறந்த முக்கியமான நபர்கள் சிலர்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று உச்ச நீதிமன்றம் புதிய திருப்பமாக அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தர் குழுவை நியமித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் மத்தியஸம் பேச புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

3 பேர் கொண்ட குழு ஆகும் இது. முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா இதன் தலைவராக இருப்பார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

அயோத்தி வழக்கு:காஞ்சி சங்கராச்சாரியார் முயற்சி உட்பட 4 முறை தோல்வியில் முடிந்த அயோத்தி மத்தியஸ்தம்! அயோத்தி வழக்கு:காஞ்சி சங்கராச்சாரியார் முயற்சி உட்பட 4 முறை தோல்வியில் முடிந்த அயோத்தி மத்தியஸ்தம்!

மூன்று பேரும் தமிழர்கள்

மூன்று பேரும் தமிழர்கள்

இவர்கள் மூன்று பேருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா காரைக்குடியில் பிறந்தவர். வாழும் கலை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கும்பகோணம் அருகே பாபநாசத்தை சேர்ந்தவர். வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் முடிவு

இவர்கள் முடிவு

இவர்கள்தான் மனுதாரர்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட போவது. இவர்கள் கடைசியாக என்ன மாதிரியான அறிக்கையை சமர்பிக்கிறார்கள் என்பதை பொறுத்தே இதன் மீதான முடிவு எட்டப்படும். நீதிமன்றம் அதை வைத்துதான் தீர்ப்பை அளிக்கும். இதனால் அயோத்தி வழக்கில் இவர்கள் பெரிய முக்கியத்துவம் பெற்று இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்

இன்னும் சிலர் இருக்கிறார்கள்

இந்த அயோத்தி வழக்கில் மிக முக்கியமான மனுதாரர் என்று பார்த்தால் அது ராம் லல்லா அமைப்பு. இதன் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் கே. பராசரன், கே .எஸ் வைத்தியநாதன் ஆகியோர். இவர்கள் இருவரும் தமிழர்கள். அதேபோல் இந்த வழக்கில் மிக மிக முக்கியமான மனுதாரர் தமிழகத்தை சேர்ந்த பாஜக உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக முக்கியமான விஷயம்

மிக முக்கியமான விஷயம்

அயோத்தி வழக்கில் தமிழகம் ஒரு வகையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்த போகிறது. தமிழர்கள் இந்த பிரச்சனையில் எடுக்க போகும் முடிவை பொறுத்துதான், இதன் மீதான தீர்வும் மாறும். வடமாநில அரசியலை பல வருடங்களாக தீர்மானிக்கும் அயோத்தி விவகாரம் தமிழர்களின் கைகளில்தான் தற்போது இருக்கிறது என்பது மிக முக்கியமான விஷயம்.

English summary
These people from Tamil Nadu will give the Major solution to 25 years old Ayodhya issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X