மத்திய அமைச்சரை சந்தித்த திருமாவளவன்.. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுமா? கிஷண் ரெட்டி சொன்ன பதில்
டெல்லி: மத்திய நிலக்கரி மற்றும் கனிமத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டியை இன்று விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிடக்கோரி அவரிடம் திருமாவளவன் மனு அளித்தார். அப்போது ‛‛தமிழக சட்டசபையில் நிறைவேறிய தீர்மானம் பார்வைக்கு வந்தது. தமிழ்நாடு மக்களோடு நாங்கள் இருப்போம்; கவலை வேண்டாம்'' என்றும் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி உறுதியளித்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று நேற்று சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மத்திய நிலக்கரி மற்றும் கனிமத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டியிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

அந்த மனுவில், ‛‛கடந்த 17.08.2023 முதல் கனிமம் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) திருத்த சட்டம், 2023 அமலுக்கு வந்தது. இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு விடுதலை சிறத்தை கட்சி லோக்சபாவில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராம் ஆகியவை அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளதால் பல்லு
யிர் பெருக்க தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் கூட 07.11.2024 அன்று மத்திய அரசு மதுரையில் பல்லுயிர் பெருக்க தலத்தை உள்ளடக்கி மத்திய அரசு 20.16 சதுர கிலோமீட்டர் பகுதியில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை வழங்கி உள்ளது. இந்த வேதாந்தா குழுமம் என்பது ஏறு்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையுடன் தொடர்பு கொண்டது. அதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் வரை இறந்தனர்.

தற்போது டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என்று சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த டங்ஸ்டன் சுரங்க திட்டத்தில் உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை திருமாவளவனிடம் இருந்து கிஷண் ரெட்டி பெற்று கொண்டார். இதுதொடர்பாக திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛
இந்திய ஒன்றிய அரசின் சுரங்கத்துறை அமைச்சர் மாண்புமிகு கிஷண்ரெட்டியை சந்தித்து, மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் "டங்க்ஸ்டன் சுரங்கம்" அமைப்பதைக் கைவிடக் கோரி இன்று மனு ஒன்றை அளித்தேன். அதனைப் பெற்றுக்கொண்ட அவர், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்திய ஒன்றிய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என உறுதியளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தனது பார்வைக்கு வந்ததாகவும் கூறினார். அத்துடன், தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருப்போம்; கவலை வேண்டாமென்றும் கூறினார். அமைச்சருடனான சந்திப்பு ஆறுதல் அளிப்பதாக இருந்தது'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications