டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோகிதர் போல் சித்தரிப்பு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்ட சம்பவத்தால் தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது அவரது உருவத்தை மாற்றுவது என அவ்வப்போது விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து புத்தகத்தில் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

Thiruvalluvar was posed as purohidar in CBSE 8th standard Hindi book

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 8-ஆம் வகுப்பு ஹிந்தி புத்தகத்தில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. மேக்மில்லன் பதிப்பக புத்தகத்தில் 10ஆவது பாடத்தில் வாசுகியுடன் திருவள்ளுவர் இருப்பது போன்று படம் உள்ளது.

இதில் திருவள்ளுவருக்கு முடிகள் மழிக்கப்பட்டு பின்னந்தலையில் கொஞ்சம் குடுமி வைக்கப்பட்டு நெற்றியில் திருநீர் பூசி சித்தரிக்கப்பட்டுள்ளது. கழுத்து கைகளில் ருத்ராட்ச மாலை அணிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஜடா முடியுடன் நீண்ட தாடியுடன் கையில் எழுத்தாணியுடன் இருப்பதைதான் காலம் காலமாக பார்த்து வருகிறோம். ஆனால் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

English summary
Thiruvalluvar was posed as purohidar in CBSE 8th standard Hindi book. Tamil activist opposes for it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X