டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை போராட்டம்.. ராணுவ தளபதி ஆதங்கம்.. இன அழிப்புக்கு பொருந்துமா? திக்விஜய் சிங் பதிலடி கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டம் தொடர்பாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பிபின் ராவத்.

இந்த நிகழ்ச்சியில்தான், இந்த விவகாரம் குறித்து முதல் முறைாக அவர் கருத்து கூறியுள்ளார். இது எதிர்க்கட்சிகள் கண்டனத்தையும் ஈட்டிக் கொடுத்துள்ளது. பிபின் ராவத் பேசியதாவது:

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- கொல்கத்தாவில் மமதா பானர்ஜி 5-வது பேரணி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- கொல்கத்தாவில் மமதா பானர்ஜி 5-வது பேரணி

எது தலைமை

தலைமை பண்பு என்பது தலைமை வகிப்பது நீங்கள் முன்னேற்ற பாதையில் சென்றால் அனைவரும் உங்களை பின்பற்றுவார்கள் தவறான வழிக்கு மக்களை அழைத்துச் செல்வோர் தலைவர்கள் கிடையாது. பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் போன்றவற்றை சேர்ந்த பெருவாரியான மாணவர்கள் வீதிகளில் போராடுவதை பார்க்கிறோம் வன்முறை கலவரங்கள் போன்றவற்றில் ஈடுபடுத்த வைப்பது என்பது தலைமை பண்பு கிடையாது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பணி ஓய்வு

பணி ஓய்வு

ராணுவத் தளபதி பிபின் ராவத் இந்த மாதம் 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் முதல் முறையாக குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த போராட்டங்களின் விளைவாக இதுவரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டனங்கள்

கண்டனங்கள்

இதனிடையே பிபின் ராவத் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அசாதுதீன் ஓவைசி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒருவர் தனது அதிகார வரம்பு எது என்பதை அறிந்து கொள்வதும் தலைமைப் பண்புதான், என்று தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் யார்

காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பெரிய கூட்டத்தை வன்முறையை நோக்கி வழிநடத்திச் செல்பவர்கள், தலைவர்கள் கிடையாது என்று ராணுவத் தளபதி கூறியுள்ளார். நான் ராணுவ தளபதியின் கருத்தை ஏற்கிறேன். தனது ஆதரவாளர்களைக் கொண்டு மத வன்முறையில் ஈடுபட்டு இன அழிப்பில் ஈடுபடாதவர்களும் தலைவர்கள் தானே.. இதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் தானே தளபதி? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

அமைச்சரவை

அமைச்சரவை

முப்படைகளுக்கும் ஒரு ராணுவ தளபதியை நியமிக்க, மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இது 4 ஸ்டார் அதிகாரி பதவியிடமாகும். ராணுவம் மற்றும் அரசுக்கு நடுவே, ஒருங்கிணைப்பாளராக இந்த, அதிகாரி விளங்குவார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த பதவி இடத்திற்கு, பிபின் ராவத் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Army Chief Gen Bipin Rawat: The way they are leading masses & crowds to carry out arson & violence in cities & towns. This is not leadership.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X