800 பேர் பலி- உறைபனி, கடும் வெயிலில் உலகை உலுக்கிய விவசாயிகள் 2020-21 டெல்லி போராட்டம்-என்ன நடந்தது?
டெல்லி: உலகமே கொரோனா எனும் சுனாமி பேரலையில் மிரண்டு கிடந்த காலம்தான் 2021. ஆனால் ஒட்டுமொத்த உலகையே உலுக்கும் வகையில் கொட்டும் பனி, உறைய வைக்கும் கடும் குளிர், வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 800க்கும் அதிகமானோரை பலி கொண்டதாக சரித்திரத்தில் இடம் பிடித்தது 2021-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி விவசாயிகளின் போராட்டம்.
நாடு மீண்டும் தற்போது விவசாயிகளின் போராட்டத்தை எதிர்கொள்ளப் போகிறது. 2021-ம் ஆண்டு போராட்டத்தின் போது தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை; விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ள வில்லை என்கிற குமுறலுடன் டெல்லியை நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் படையெடுத்துள்ளனர்.

2021-ம் ஆண்டு போராட்டத்தைப் போல தற்போதைய போராட்டம் உக்கிரமடைந்து நீடித்து விடக் கூடாது என்பதால் இதனை தடுக்கும் வகையில் முழு வீச்சில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது. டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. டெல்லி முழுவதுமே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அப்படி என்னதான் 2020-2021-ல் நடைபெற்றது? உலகை உலுக்கிய டெல்லி விவசாயிகளின் போராட்டம் என்ன? அப்போது என்னதான் நடந்தது?
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி விவசாயிகளின் நலனுக்காக என மத்தியில் ஆளும் பாஜக அரசு 3 சட்டங்களைக் கொண்டு வந்தது. இதில் ஒன்று மண்டி எனப்படுகிற விவசாயிகளுக்கு நியாயமான விலை கொடுத்து வந்த அமைப்பு முறையை தகர்க்கும் வகையில் மண்டிகளுக்கு வெளியே பொருட்களை விற்பனை செய்ய அனுமதித்தது. இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விலையை கார்ப்பரேட்டுகள் தீர்மானிக்கும் நிலைக்கு வழிவகுக்கப்பட்டது.
அதேபோல விவசாயிகள் தங்களது பொருட்களை ஆன்லைனில், ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்யலாம் என்பது மற்றொரு சட்டம். இதுவும் விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் சட்டமாகும். அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளை ஒப்பந்த கூலிகளாக்கிவிடும் அபாயம் கொண்டது இந்த சட்டம்.
நாட்டின் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்தே தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்டவைகளை நீக்கும் சட்டம். இதனால் இந்த விவசாய விளை பொருட்களை பதுக்கி வைத்து மிக மோசமான பொருளாதார சீரழிவுக்கு வித்திடும் சட்டம்.
2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி மத்திய அரசின் இந்த 3 சட்டங்களும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதே பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கி விட்டது.
2020-ம் ஆண்டு செப்டம்பர் 17-ல் லோக்சபாவில் பெரும்பான்மையுடன் இந்த வேளாண் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.
2020-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி ராஜ்யசபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
2020-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தனர்.
2020-ம் ஆண்டு செப்.25-ந் தேதி நாட்டின் பல பல பகுதிகளிலும் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சி வெடித்தது.
2020-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி மத்திய பாஜக அரசின் சர்ச்சைக்குரிய இந்த 3 வேளாண் சட்டங்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டது.
2020-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ போராட்டத்தை பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் பிரகடனப்படுத்தினர்.
2020-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி டெல்லி சலோ போராட்டத்துக்காக டெல்லியை நோக்கி விவசாயிகள் படையெடுப்பு தொடங்கியது. டிராக்டர்கள், இருசக்கர வாகனங்களில் மட்டுமில்லாமல் நடந்தும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். டெல்லி செல்லும் வழிகளில் எல்லைகளில் விவசாயிகள் தடுக்கப்பட்டனர். டெல்லியில் 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் 20,000க்கும் அதிகமான விவசாயிகள் ஒன்று திரண்டனர்.
2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.
2020-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி 2-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
இப்படித்தான் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மையம் கொண்டது.
மத்திய அரசின் 3 புதிய விவசாய சட்டங்களை மத்திய பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் குரலை காது கொடுத்து கேட்கவில்லை.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தரப்பில், விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் தர வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவை விட 50% கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். மண்டிகள் மூலமாகவே விவசாய விளை பொருட்கள் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை உரத்து முன்வைத்தனர். டெல்லி எல்லைகளிலேயே கூடாரங்கள் அமைத்து குடும்பம் குடும்பமாக முகாமிட்டு இப்போராட்டங்களை முன்னெடுத்தனர்.
2021-ம் ஆண்டு புதிய ஆண்டு பிறந்த போதும் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. 2020-ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் 2021-ம் ஆண்டில் டிசம்பர் 9-ந் தேதி வரை ஓராண்டு காலம் தொடர்ச்சியாக நடைபெற்றது. மத்திய அரசும் பிரதமர் மோடியும் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக உறுதியளித்ததால் விவசாயிகளின் இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டங்களில் பங்கேற்று உடல்நலன் பாதிப்பு, விபத்தில் பாதிக்கப்பட்டு என மொத்தம் 800 விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்தனர். இதன் பின்னரே மத்திய பாஜக அரசு இறங்கி வந்தது. விவசாய சட்டங்களுக்காக பிரதமர் மோடி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். டெல்லி மண்ணில் ஒரு ஆண்டு காலம்.. இத்தனைக்கும் உலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் உச்சத்தில் இருந்த போதும் விவசாயிகள் வாழ்வுரிமைக்காக நடத்திய மகத்தான போராட்டம் உலகையே உலுக்கியது. அதனால் தான் அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் என்பது சரித்திரம்.
தற்போதும் 2021 போராட்டத்தின் தொடர்ச்சியாக மீண்டும் டெல்லியை நோக்கி விவசாயிகள் படையெடுத்துள்ளனர். இப்போதும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முழு வீச்சில் மத்திய அரசு தயாராகி வருகிறது. இதனால் டெல்லி எல்லைகளும் அண்டை மாநிலங்களும் பெரும் பதற்றத்தில் சிக்கி உள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications