பஞ்சாப்: பலிக்காத சரண்ஜித் மேஜிக்! ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுக்கும் காங்கிரஸ்- டைம்ஸ் நவ் சர்வே
டெல்லி: தற்போது வெளியாகி உள்ள டைம்ஸ் நவ் பஞ்சாப் சட்டசபை எக்ஸிட் போல் முடிவுகளில், ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை அமைக்கும் என கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இப்போது சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
இதனிடையே தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அதில் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பாலும் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி வெற்றி
இதுவரை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளிலும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது பஞ்சாப் மாநிலத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 117 இடங்களைக் கொண்ட பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தோல்வி
அதேநேரம் தற்போது ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் வெறும் 22 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அகாலி தளம் கட்சி மொத்தம் இருக்கும் 117 இடங்களில் 19 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 5 இடங்களிலும் இதர மற்றும் சுயேச்சைகள் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் ஆம் ஆத்மி கட்சிக்கே சாதகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் தேர்தல்
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 59 இடங்கள் தேவை, கடந்த தேர்தலை கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையில் சந்தித்த காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. பஞ்சாப் தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கிய ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கடும் போட்டி
இருப்பினும், கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி வென்ற 20 இடங்களில் 18 மால்வா என்ற பகுதியில் இருந்து மட்டுமே வந்தது. எனவே, இந்த முறை ஆளும் கட்சியாக உருவெடுக்கும் அளவுக்கு ஆம் ஆத்மியால் வெல்ல முடியுமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்! தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் ஆம் ஆத்மி அதிக இடங்களைக் கைப்பற்றி, தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications