எல்.முருகனின் தமிழ் புத்தாண்டு விருந்து.. பங்கேற்ற மோடி! அழைத்தும் தவிர்த்த அண்ணாமலை -இதான் மேட்டரா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் தனது வீட்டில் சிறப்பு விழா நடத்தும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்களுக்கு விருந்து வழங்கும் நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதை தவிர்த்து சென்னைக்கு வந்து இருக்கிறார். இதற்கான பின்னணி காரணம் என்னவென்று பார்ப்போம்.

சித்திரை தமிழ் புத்தாண்டு இன்று உலக தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழாவை கொண்டாடி தலைவர்களுக்கு சிறப்பு விருந்து வழங்க இருக்கிறார்.

TN BJP president Annamalai avoid L Murugan Tamil new year feast in Delhi

இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், வி.வி.ஐ.பி.க்கள் என பலரையும் எல்.முருகன் அழைத்து இருக்கிறார். குறிப்பாக கடந்த சில நாட்களாக டெல்லியில் தங்கி இருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையையும் தமிழ்நாடு பாஜக முக்கிய நிர்வாகிகளையும் அவர் அழைத்து உள்ளார்.

இந்த நிலையில், இன்று மாலை டெல்லியில் உள்ள எல்.முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா வெகு விமரிசையாக தொடங்கியது. விநாயகர் ஆராத்தியுடன் தொடங்கிய இந்த விழாவில், தமிழ் கலைகளை பறைசாற்றும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ் சினிமா பாடல்கள் ஒலிக்கப்பட்டு நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான தமிழ் மக்கள், பாஜகவினர் பலர் பங்கேற்று இருக்கிறார்கள்.

TN BJP president Annamalai avoid L Murugan Tamil new year feast in Delhi

அதேபோல் மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்களும் இந்த விழாவில் பங்கேற்றனர். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசனும் இந்த விழாவில் பங்கேற்று உள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வது கடைசி வரை இறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், எல்.முருகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவர் விழாவில் கலந்துகொண்டு தமிழின் சிறப்புகள் குறித்து உரையாற்றி உள்ளார். இதனை தொடர்ந்து எல்.முருகன் வீட்டில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

TN BJP president Annamalai avoid L Murugan Tamil new year feast in Delhi

ஆனால், எல்.முருகன் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தும் இந்த தமிழ் புத்தாண்டு விழாவிலும், விருந்து நிகழ்ச்சியிலும் அண்ணாமலை பங்கேற்காமல் தவிர்த்து உள்ளார். திமுகவின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அண்ணாமலை அறிவித்து இருக்கும் நிலையில், எல்.முருகனிடம் இதுகுறித்து தெரிவித்துவிட்டு தன்னால் வர இயலாது என்று சொல்லி அவர் சென்னைக்கு வந்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+