டெல்லி பாஜக கூட்டத்தில் தரையில் உட்கார்ந்த அண்ணாமலை.. குத்தாட்டம் போட்ட பொருளாளர்!
டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு டெல்லியில் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் கடந்த இருநாட்களாக நடைபெற்றது. இந்த இரண்டு நாட்கள் கூட்டத்தில் தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள் தொடர்பான சில படங்கள்தான் இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக பேசப்பட்டு வருகின்றன.
லோக்சபா தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்கிற நிலைமையில் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு வரவில்லை. ஏற்கனவே இருக்கிற கட்சிகள் அதிமுக பக்கமா? பாஜக பக்கமா? என ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.

தமிழில் பேச சொன்ன மோடி: இந்த நிலையில் டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் நேற்றும் இன்றும் டெல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் பேசினார். அப்போது பிரதமர் மோடி குறுக்கிட்டு நீங்கள் தமிழ்நாட்டுக்காரர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் வந்துள்ளனர்; ஆகையால் தமிழில் பேசுங்கள்; அதேபோல தெலுங்கிலும் பேசுங்கள் என சொல்ல மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போனார் நிர்மலா சீதாராமன். இதனைத் தொடர்ந்து நெகிழ்ச்சியுடனேயே நிர்மலா சீதாராமன் தமிழில் பேசி முடித்தார்.

தரையில் அமர்ந்த அண்ணாமலை: இன்றைய நிகழ்வின் போது, மிகப்பிரம்மாண்டமான, ஆயிரக்கணக்கான பேர் அமர்ந்திருக்கும் அரங்கில் சிலர் தரையில் அமர்ந்திருந்தனர். இந்த தரை வரிசையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உட்கார்ந்திருந்தார். டெல்லியிலும் போய் தலைவர் எளிமையாக தரையில் அமர்ந்திருக்கிறார் என பாஜகவினர் பெருமிதம் பொங்க சமூக வலைதளங்களங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல்லாயிரம் பேர் அமரக் கூடிய மண்டபத்தில் ஒரு கட்சியின் மாநில தலைவருக்கு இருக்கை போடப்படவில்லையா? இருக்கை இருந்தும் ஏன் கீழே அமர வேண்டும்? என இன்னொரு தரப்பும் கேள்விகளை கேட்டு வருகிறது.

நேற்று முதல் நாள் தேசிய பொதுக்குழு கூட்டத்தில் மாநில பொருளாளர் திரு.SR.சேகர் அவர்களுடன் உற்சாகமாக! pic.twitter.com/edaO6VrCiI
— Dolphin Sritharan (@DolphinSrithar) February 18, 2024
குத்தாட்டம் போட்ட பொருளாளர்: அதேபோல தமிழ்நாடு டிவி விவாதங்களிலும் சமூக வலைதளங்களில் ஆணித்தரமாக பேசக் கூடியவர் பதிவிடக் கூடியவர் தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர். அவர் தேசிய கவுன்சில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளின் போது மாநில துணை தலைவர் Dolphin Sritharan தோளில் கை போட்டபடி "தொடர்ந்து டான்ஸ் ஆடும்" வீடியோவும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இப்போது சமூக வலைதளங்களில் இவைதான் ஹாட் டாப்பிக்காக ஓடுகிறது!

-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications