டெல்லி ஜி20 ட்ரிப் ஓவர்.. இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்! டைம் எப்போ?
டெல்லி: பல்வேறு உலக நாடுகளில் தலைவர்கள் கலந்துகொண்டு இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்று இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்.
அமெரிக்கா, ரஷியா, இந்தியா, பிரிட்டன், சீனா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, இத்தாலி, சவூதி அரேபியா, துருக்கி, இந்தோனேஷியா, மெக்சிகோ, பிரேசில், துருக்கி, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை கொண்ட ஜி 20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கி இருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான ஜி20 நாடுகளின் 17 வது உச்சி மாநாடு நவம்பர் மாதம் இந்தோனோசியா தலைநகர் பாலியில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள்.
அந்த மாநாட்டில் ஜி 20 நாடுகள் குழுவின் தலைமை பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த குழுவில் இருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் தலைமை பதவி வழங்கப்படும். தலைமை பதவியேற்கும் நாட்டில் அந்த ஆண்டுக்கான ஜி 20 மாநாட்டு கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜி 20 மாநாடு டெல்லியில் தொடங்கி உள்ளது. இதற்கான அனைத்து வகையான ஏற்பாடுகளையும் மத்திய அரசு பல மாதங்களாக செய்து வருகிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளில் தலைவர்கள் கலந்துகொண்டு இருக்கிறார்கள். மாநாட்டின் முதல் நாளான நேற்று, ஜனாதிபதி திரவுபதி முர்மு, உலகத் தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு துாதர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் மாலை 6 மணிக்கு டெல்லிக்கு சென்றடைந்தார். இந்த நிலையில் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை 10:05 மணிக்கு சென்னை திரும்ப இருக்கிறார்.












Click it and Unblock the Notifications