மாஸ்டர் விஜய்யாக ராகுல் காந்தி.. வாத்தி கம்மிங் பாடலுடன் ரீ என்ட்ரி! செமயா மேட்ச் ஆகுதே -மாஸ் வீடியோ
டெல்லி: ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகால சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் அவருக்கு எம்பி பதவி வழங்கப்பட்டு உள்ள நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு பதில் ராகுல் காந்தியை வைத்து பாடல் வீடியோ எடிட் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகாவின் கோலாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணை பெயரை குறிப்பிட்டு ஒரு இந்த பெயர் கொண்டவர்கள் எல்லாம் என்று கூறி பொதுவான ஒரு விமர்சனத்தை முன்வைத்தார்.

அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகம் மீது ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில், குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கு 4 ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் எம்பி பதவி பறிக்கப்படும்.
அதற்கு ஏற்ப ராகுல் காந்தியின் எம்பி பதவியும் பறிக்கப்பட்டு, அவர் பல ஆண்டுகளாக தங்கி இருந்த அரசு இல்லமும் கைப்பற்றப்பட்டது. இதற்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் கைகொடுக்காத நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக குஜராத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் முறையான காரணங்கள் இல்லை என்றும், ஒரு நாள் குறைவாக தண்டனை வழங்கி இருந்தால் கூட அவர் எம்பி பதவியை இழந்திருக்க மாட்டார் எனவும் கருத்து தெரிவித்து, இதனால் வயநாடு தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி தண்டனையை நிறுத்தி வைத்தது.
இதனால் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 நாட்களாக எம்பி பதவி வழங்கப்படாததை கண்டித்து பல்வேறு தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட காங்கிரஸ் கட்சி இன்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்தது.
இதற்கிடையே ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதனை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இதனால் சுமார் 136 நாட்கள் கழித்து ராகுல் காந்தி எம்பியாக நாடாளுமன்றம் செல்ல உள்ளார்.
வாத்தி கம்மிங் 🔥🔥🔥 pic.twitter.com/8e0Ov8jkJn
— TN Congress IT & Social Media Department (@TNCCITSMDept) August 7, 2023
இதனை கொண்டாடும் வகையில் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலில் விஜய்க்கு பதிலாக ராகுல் காந்தியின் முகத்தை எடிட் செய்து காங்கிரஸ் கட்சி வீடியோ வெளியிட்டுள்ளது. விஜய் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் அழைக்கப்படுவதைபோல், ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு இருக்கிறது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications