மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு ஆளுநர் மவுனமாக இருக்கலாமா? உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த ரிட் மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடந்து வருகிறது. இன்று காலையில் முதல் வழக்காக இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ஆளுநர் ஆர்.என். ரவி மவுனமாக இருப்பது ஏன் உச்சநீதிமன்றம் என்றும், தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவதா? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த 24 மணி நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் முதல் வழக்காக விசாரணைக்கு வந்துள்ளது.

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு மனு
தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்என் ரவி, தமிழக அரசுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார். இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை. எனவே ஆளுநரின் இந்த செயல் அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்பதைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முதலில் ஒரு ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
இதில், பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க ஆளுநர் ரவி வலியுறுத்துகிறார் என்பதையும் தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பார்திவாலா பெஞ்ச், இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். அல்லது தீர்த்து வைக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு நேற்று முன் தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் ஆளுநர் தரப்பில் காரசார வாதங்கள் நடைபெற்றன.
முதல் வழக்காக விசாரணை
அப்போது, மாநில ஆளுநர் - மாநில அரசு இடையேயான மோதலால் மக்களுக்குதான் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர், அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, அரசியல் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கிறது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். மேலும், தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த 24 மணி நேரத்துக்குள் தமிழக ஆளுநர் ரவி முடிவெடுக்க வேண்டும்.
ஆளுநர் ரவி எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என்பதை மத்திய அரசு நாளை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்தான், இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆளுநருக்கு எதிரான வழக்கு முதல் வழக்காக இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஆளுநர் மவுனமாக இருக்கலாமா?
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநர் மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பதற்கு விடை காண வேண்டும் என்று கூறினர். மேலும் ஆளுநர் மவுனமாக இருக்கலாமா? என்றும் மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருந்தால் என்ன அர்த்தம்? என்றும் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதங்களை முன்வைத்து வருகிறார். இறுதி விசாரணையில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து விட்டதால், இன்றே உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications