நாங்கள் விளையாடுவது தேசத்துக்காக.. எங்கள் மீது ஏன் ஜாதிய வன்மம்? ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா வேதனை
டெல்லி: ஒலிம்பிக்கில் நாங்கள் தேசத்துக்காகதான் விளையாடுகிறோம்; எங்கள் மீது ஏன் ஜாதிய வன்மம் என வேதனை தெரிவித்துள்ளார் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா கட்டாரியா.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது. அதேபோல் மகளிர் ஹாக்கி அணியும் அசத்தலான ஆட்டங்களை வெளிப்படுத்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அரை இறுதியில் போராடி இந்திய வீராங்கனைகள் தோற்றனர்.
ஆனாலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி மீது மகத்தான நம்பிக்கையை அந்த வீராங்கனைகள் உருவாக்கிவிட்டனர். இத்தனைக்கும் ஒடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் மிகவும் வறுமை நிலையில் இருந்த வீராங்கனைகள்தான் தேசத்தின் ஆன்மாக்களாக ஒலிம்பிக்கில் கோலோச்சினர். ஒலிம்பிக்கில் அவர்கள் பதக்கம் வெல்ல முடியாமல் போயிருக்கலாம்.. ஆனால் இந்தியர்களின் உள்ளங்களில் தங்கப் பிள்ளைகளாக, செல்லப் பிள்ளைகளாக இதய சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கின்றனர்.

ஜாதி ரீதியாக அவமதிப்பு
இப்படியான வீர மங்கைகளை அவமதிக்கும் வகையில்தான் ஹரித்வார் புனித நகரில் அந்த அட்டூழிய சம்பவம் நிகழ்ந்தது. ஒலிம்பிக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வீராங்கனை வந்தனா கட்டாரியா வீடு முன்பாக ஆதிக்க ஜாதி கும்பல் ஒன்று கூடி அவருக்கு எதிராக ஜாதிய வசவுகளை வீசியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக தலித்துகளையே விளையாட்டு அணிகளில் இருந்து துரத்த வேண்டும் என கொக்கரித்திருக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவம் பெரும் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சு.வெங்கடேசன் எம்.பி.
இப்படியான ஜாதிவெறி கும்பல் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தும் வருகிறது. லோக்சபா எம்.பி. சு. வெங்கடேசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு தலா ரூ1 கோடி பரிசுத் தொகை வழங்க வேண்டும்; மத்திய அரசு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்தியாவின் செல்ல மகள்
மேலும் இந்தியாவின் செல்ல மகள் வந்தனா குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதி... இதே போட்டியில் மூன்று முறை தங்கம் வென்ற முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இதே அணிதான்... கால் இறுதி போட்டிக்கு இந்தியாவை தகுதியாக்கிய தென் ஆப்ரிக்காவுடனான போட்டியில் ஹாட் ட்ரிக் கோல் அடித்து சாதனை புரிந்து வெற்றிக்கு பங்களித்தது வந்தனாதான்... உலகம் முழுவதுமுள்ள மக்கள் குறிப்பாக விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை குறைத்துள்ளது... தேசத்திற்காக விளையாடும் பெருமை மிக்க வீரர்கள் மனதை இரணமாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் வெங்கடேசன் எம்.பி.

அவமதித்தால் குண்டர் சட்டம்
சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், ஹரித்துவாரில் ஒலிம்பிக் ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் குடும்பத்தினரை அவமதித்த சாதி வெறியர்களை சிறையில் அடைக்க வேண்டும்! வந்தனா கட்டாரியா சொந்த ஊர் திரும்பும் போது வெட்டிப் பயல்கள் யாரும் வம்பு வளர்த்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள்! என கோபம் கொப்பளிக்க சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

வந்தனா வேதனை
இச்சம்பவம் தொடர்பாக டோக்கியோவில் இருக்கும் வந்தனா கட்டாரியா வேதனையுடன் கூறியிருப்பதாவது; நாங்கள் அனைவரும் நாட்டுக்காக விளையாடுகிறோம். ஜாதிய வசவுகள், வன்மங்கள் எதுவாக இருந்தாலும்... நானும் கேள்விபட்டேன்.. அப்படி எல்லாம் நடந்திருக்க கூடாது. எங்களுக்கு ஹாக்கி பற்றிதான் சிந்தனை. எங்களுடன் இளம்பெண்கள் எல்லாம் இருக்கின்றனர். நாங்கள் தேசத்துக்காக விளையாடுகிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றே.. அத்தனை விஷயங்களிலும் ஒற்றுமையாகத்தானே இருக்கிறோம். இவ்வாறு வந்தனா கட்டாரியா கூறினார். மேலும் என்னுடைய செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்தேன். இன்னமும் எங்கள் குடும்பத்தினருடன் நான் பேசவில்லை. இந்தியா திரும்பிய பின்னர் இதுபற்றி பேசுகிறேன்.. மிகவும் வேதனையாகவே இருக்கிறது என்றும் வந்தனா கட்டாரியா தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஹரித்வார் எஸ்.பி. கமலேஷ் உபாத்யாய் கூறுகையில், கட்டாரியா குடும்பத்துடன் ஆதிக்க ஜாதி இளைஞர்களுக்கு நீண்டகால பிரச்சனை இருந்து வந்துள்ளது. 3 பேரை கைது செய்திருக்கிறோம். சவுஹான் என்பவரை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் கைது செய்துவிடுவோம் என்றார்.
Recommended Video

வந்தனாவுக்கு ஆதரவு
இதனிடையே வந்தனா கட்டாரியா குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அவர்கள் வீட்டுக்கு செல்கின்றனர். பலர் பேனர்களை கைகளில் ஏந்தியபடி வந்தனா கட்டாரியாவுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பிச் செல்கின்றனர். இந்திய அணியின் தோல்வியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது தேசதுரோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications