குழந்தைகளுக்கு பரவும் தக்காளி காய்ச்சல்..என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது - மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: நாடு முழுவதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது பெரும்பாலும் 1 முதல் 10 வயதுடைய குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள பெரியவர்கள் ஆகியோரை பாதிக்கிறது. கேரளா, தமிழ்நாடு, ஹரியானா, மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மட்டுமே இத்தகைய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவில் பரவிய தக்காளி காய்ச்சல் நோய், கர்நாடகா, தமிழகம், அரியானா, ஒடிசா மாநிலங்களில் பரவ வாய்ப்பு உள்ளதாக புவனேஸ்வர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறை மற்றும் ஆலோசனைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுத்தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கடந்த மே 6ம் தேதி தக்காளி காய்ச்சலான முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications