கொடூர கொரோனா.. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு.. கேரளாவுக்கு முதலிடம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி, கோவிட் பிரச்சினையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 75ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில்தான் அதிகபட்சமாக 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
சீனாவின் வூகான் மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பிரச்சினை, உலக நாடுகள் பலவற்றை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவிலும் நோய் தாக்கம் வேகமாக பரவி வருவதை பார்க்க முடிகிறது.

மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகம், இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்தியாவில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
Ministry of Health and Family Welfare, Government of India: Total number of confirmed COVID-19 cases across India (including foreign nationals) is 73. pic.twitter.com/xO803rglYT
— ANI (@ANI) March 12, 2020
டெல்லியில் 6, ஹரியானாவில் 14 (இந்த மாநிலத்தில், பாதிக்கப்பட்ட அத்தனை பேருமே வெளிநாட்டினர்தான்-உள்நாட்டினர் இல்லை), கேரளா 19, ராஜஸ்தான்- வெளிநாட்டினர் 2, உள்நாட்டினர் 1, தெலுங்கானா 1, உத்தர பிரதேசம்-வெளிநாட்டுக்காரர் 1, உள்நாட்டினர் 10, லடாக் 3, தமிழகம் 1, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் தலா 1, கர்நாடகா 4, மகாராஷ்டிரா 11. ஆக மொத்தம், பாதிக்கப்பட்ட 73 பேரில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, ராஜாங்க ரீதியிலான மற்றும் வேலைவாய்ப்பு போன்ற சில பிரிவுகளைத் தவிர அனைத்து ஏப்ரல் 15 ஆம் தேதி வரை, இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. அத்தியாவசியமற்ற அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் தவிர்க்குமாறு அரசு, இந்தியர்களை அறிவுறுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில், விசாக்கள் இடைநிறுத்தி வைக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
ராஜதந்திர, உத்தியோகபூர்வ, ஐ.நா / சர்வதேச நிறுவனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திட்ட விசாக்கள் தவிர, தற்போதுள்ள அனைத்து விசாக்களும் 2020 ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2020 மார்ச் 13 ஆம் தேதி முதல், நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள, விசா இல்லாத பயண வசதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications