டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

#Breaking ஓபிசி பட்டியலில் திருநங்கைகள்.. மத்திய அரசு அதிரடி.. அமைச்சரவையிடம் வரைவு அறிக்கை

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.. அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவரையும் ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இந்தியாவில் இருந்து வருகிறது.

திருநங்கைகளை ஒபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. திருநங்கைகளை ஓபிசி பிரிவினருக்கான பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை சமூக நீதித்துறை, மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.

திருச்செங்கோடு கவுன்சிலரான முதல் திருநங்கை ரியா.. ராசிபுரத்தில் போட்டியிட சீட் கொடுக்குமா திமுக? திருச்செங்கோடு கவுன்சிலரான முதல் திருநங்கை ரியா.. ராசிபுரத்தில் போட்டியிட சீட் கொடுக்குமா திமுக?

நடவடிக்கை

நடவடிக்கை

இப்படி ஒரு தீர்ப்பு சொல்லப்படும்போதே நாட்டு மக்களும், தலைவர்களும் அதை வரவேற்றிருந்தனர்.. எனவே, அதற்கான நடவடிக்கையை நிச்சயம் மத்திய அரசு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.. இந்நிலையில்தான், சுப்ரீம் கோர்ட்டின் அந்த தீர்ப்பினை அடிப்படையாக கொண்டு, மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் தற்போது மிக முக்கியமான வரைவை தயார் செய்து, மத்திய அமைச்சரவைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆய்வுகள்

ஆய்வுகள்

பொதுவாக இப்படி ஏதாவது வரைவு தயாரானால் அதற்கு ஏதாவது எதிர்ப்புகள் கிளம்புவது வழக்கம்.. ஆனால, இந்த வரைவுக்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. நேஷனல் எக்கனாமிக் கமிஷன் உட்பட பல்வேறு அமைப்புகளிடம் இது சம்பந்தமான ஆய்வுகளை, ஆலோசனைகளை மேற்கொண்டு, யாருமே எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்ற அடிப்படையில்தான், இந்த வரைவு மத்திய அமைச்சரவை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

இதன்மீது மத்திய அமைச்சரவை முடிவெடுத்து, அதற்கான ஒப்புதலை வழங்கும்.. அதற்கு பிறகு, அதனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்படும்.. அதற்கு பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இது சட்டமாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.. இடஒதுக்கீடு பெற ஏதுவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திருநங்கைகளை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பணியிடங்கள்

பணியிடங்கள்

கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... ஓபிசி பட்டியலில் திருநங்கைகள் இடம்பெற்றால், அரசு பணிகளில் அவர்களுக்கான பணியிடங்கள் நிச்சயம் உறுதி செய்யப்படும்..

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்த கோரிக்கையைதான் மூன்றாம் பாலினத்தவர்கள் பல வருடங்களாகவே முன்வைத்து எதிர்பார்த்து காத்திருந்தனர்.. இப்போது இது வரைவு சட்டமாக மாறும் பட்சத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் பெருகும் வாய்ப்பு உள்ளது... இந்த அதிரடி அறிவிப்பை திருநங்கைகள் வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்..

English summary
Transgender people on the OBC list, and draft report to the Union cabinet soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X