நாடாளுமன்றத்தில்.. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஆஸ்பத்திரியில் அனுமதி!
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சாந்தா சேத்ரி நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இன்றும் நாடாளுமன்றம் கூடியபோது மாநிலங்களவை, மக்களவை இரண்டிலும் மேற்கண்ட பிரச்சினையை கையில் எடுத்து எதிர்கட்சிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள், பிரச்சினை, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மக்களவையில் பேப்பரை தூக்கி எறிந்து கோஷங்களை எழுப்பினார்கள்.
மாநிலங்களவையிலும் இதே நிலைதான் நீடித்தது. எதிர்கட்சிகளின் கூச்சல், குழப்பத்தால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.யான சாந்தா சேத்ரியும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த மாநிலங்களவை எம்.பி. சாந்தா சேத்ரி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications