உதயநிதியின் பாஷை எப்போதும் அப்படித்தான்.. அரசியலுக்கு இது நல்லதல்ல.. நிர்மலா சீதாராமன் ஆவேசம்
டெல்லி: அவுங்க (உதயநிதி) பாஷை எப்போதும் அப்படித்தான்.. அவுங்க அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிற மாதிரி எல்லாம் பேசுகிறவர்கள்.. அவுங்க அப்பன் வீட்டு சோற்றை வைத்துக் கொண்டு இன்றைக்கு பதவியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாரா அப்படின்னு கேட்க முடியுமா? என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து பேசினார். தொடர்ந்து மக்கள் பணத்தைதான் நிதியாக கேட்கிறோம்.. அவர்கள் அப்பா வீட்டு காசை கேட்க வில்லை என்று அமைச்சர் உதயநிதி விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது நிர்மலா சீதாராமன் கூறியதவது:-

அவுங்க (உதயநிதி) பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். சனாதன தர்மத்தின் போதும் அதை அழிக்க வரவில்லை.. ஒழிக்கவே வந்து இருக்கிறோம் என்று பேசினார் அல்லவா.. அவருடைய பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். அவுங்க அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிற மாதிரி எல்லாம் பேசுகிறவர்கள்.. அவுங்க அப்பன் வீட்டு சோற்றை வைத்துக் கொண்டு இன்றைக்கு பதவியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாரா அப்படின்னு கேட்க முடியுமா?
மக்களால் தேர்வு செய்யப்பட்டு வந்து இருக்கிறார்.. அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்கத்தானே செய்கிறோம். இந்த அப்பன் வீடு... பேச்சு எல்லாம் அரசியலில் நல்லது இல்லை.. அவர் அரசியலில் இன்னும் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார் அல்லவா.. அந்த குடும்பமும் ஆசைப்படுகிறது அல்லவா..
பேசுற பாஷை.. மொழி.. அவுங்க தாத்தா எப்பேர்பட்ட தமிழ் அறிஞர். அதனால், பதவிக்கு ஏற்ற மாதிரி பேச வேண்டும். அளந்து பேச வேண்டும். இதை நான் பொதுவாக சொல்கிறேன். அவர் மீது காழ்ப்புணர்ச்சியோடு சொல்லவில்லை. இதுக்கு முன்னாடி ஒரு உதாரணம் பார்த்தோம். இப்போது இன்னொரு உதாரனம் பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications