உதயநிதியின் சனாதன பேச்சு நீதிமன்ற அவமதிப்பு இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! முக்கிய அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு இல்லை. உதயநிதி ஸ்டாலினின் பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் வாய்மொழியாக கூறியது. அதோடு மனுதாரருக்கு முக்கிய அட்வைஸையும் வழங்கியது.

தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

Udhyanidhi Stalin s Sanatana Dharma speech is not a contempt of court, says Supreme Court

இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின், ‛‛ சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு முதலில், வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். அதேபோல் தான் சனாதனம்.'' என்றார்.

இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின், ‛‛ சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு முதலில். வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். அதேபோல் தான் சனாதனம்.'' என்றார்.

உதயநிதியின் இந்த பேச்சுக்கு எதிராக தான் பாஜகவினர் கொந்தளித்தனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பல பாஜக தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதோடு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போலீஸ் நிலையங்களில் புகார்கள் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் மீது வெளிமாநில போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுமட்டுமின்றி உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது.

இதுதவிர உதயநிதி ஸ்டாலின் மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டுக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்பட 262 பேர் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர். அதோடு சனாதன மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மதவெறுப்பு பேச்சுக்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பாட்டியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனுவையும் விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு பற்றி புகாரளித்தாலும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அவரது செயல்பாடு மதவெறுப்புக்கு எதிரான பேச்சு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளது. எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதி மதவெறுப்பு பேச்சுக்கு எதிரான வழக்குகளுடன் விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‛‛மதவெறுப்பு பேச்சு தொடர்பான மனுக்கள் தனித்தனியாக விசாரிக்கப்படும். சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும்'' என வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+