டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினர்... இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சம்மதம்!

Google Oneindia Tamil News

புதுடெல்லி : இந்திய குடியரசு தினத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வர் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்தார்.

இந்திய குடியரசு தினத்தில் இங்கிலாந்து பிரதமர் கலந்து கொள்ள உள்ளது இருநாட்டு உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தின் அடையாளமாகும் என்று இந்திய வெளியுறவு துறை அமைச்ச ஜெய்சங்கர் தெரிவித்தார்.

UK Secretary announced UK PM Boris Johnson will attend the 2021 Republic Day of India

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2021 இந்திய குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு வருவார் என இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. நவம்பர் 27-ம் தேதி தொலைபேசி உரையாடலின் போது பிரதமர் நரேந்திர மோடி, போரிஸ் ஜான்சனை குடியரசு தின விழாவில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுத்தார் என தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் இன்று இதனை தெரிவித்து உள்ளார். அவரும், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தலைநகர் டெல்லியில் இன்று இரு தரப்பு ஆலோசனை நடத்தினர்.

போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சம்மதித்து விட்டதாவும், அதனால் அவர் இந்திய குடியரசு தின விழாவில் பங்கு கொள்வர் எனவும் இந்த கூட்டத்தில் டொமினிக் ராப் அறிவித்தார்.

இந்த கூட்டம் குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது:-குடியரசு தினத்திற்கான அழைப்பை இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் ஏற்றுக்கொள்வது இந்தியா -இங்கிலாந்து உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தின் அடையாளமாகும்

விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுப்பது ஏன்..? கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கேள்வி..! விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுப்பது ஏன்..? கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கேள்வி..!

பயங்கரவாதத்தால் முன்வைக்கப்பட்ட சவால்கள் குறித்தும் ஆப்கானிஸ்தானின் நிலைமை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பிரச்சினைகளை கையாள்வது, இரு நாட்டின் வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். சமீபத்திய ஆண்டுகளில் உலக அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவும், இங்கிலாந்தும் ஒன்றாக இணைந்து செயல்படுவதன் மூலம் எங்கள் நலன்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஜெய்சங்கர் கூறினார்.

English summary
UK Secretary of State Dominique Robb has announced that UK Prime Minister Boris Johnson will attend the 2021 Republic Day of India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X