மத்திய அரசு சம்பாதிப்பது எப்படி? ஒரு ரூபாயில் வரவு - செலவு என்ன? இதோ பட்ஜெட்டின் முழு விபரம்
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் மத்திய அரசு எப்படி ஒரு ரூபாயை சம்பாதித்து எப்படி செலவு செய்கிறது? என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசின் ஒரு ரூபாயில் வரவு - செலவு பற்றி விளக்கப்பட்டுள்ளது.
பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய ஆட்சியின் முதல் பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மேலும் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் எப்படி கிடைக்கிறது? அந்த ஒரு ரூபாயை மத்திய அரசு எப்படியெல்லாம் பிரித்து செலவு செய்கிறது? என்பது பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு ரூபாயில் மத்திய அரசுக்கு வரவாக கடன் உள்ளிட்ட வருவாய் மூலம் 27 பைசா வருகிறது. அடுத்ததாக வருமான வரியாக 19 பைசா, சரக்கு மற்றும் சேவை வரியாக 18 பைசா, நிறுவன வரியாக 17 பைசா, வரி அல்லாத வருவாய் ரசீது வகையில் 9 பைசா, கலால் வரியாக 5 பைசா, சுங்க வரியாக 4 பைசா, கடன் அல்லாத மூலதன ரசீது வழியாக 1 பைசா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு ரூபாயில் மத்திய அரசின் செலவை எடுத்து கொண்டால் அதிகபட்சமாக மாநில வரி பங்கீட்டுக்கு 21 பைசாவும், வட்டிக்கு 19 பைசாவும் செலவாகிறது. இததவிர மத்திய துறை திட்டங்களுக்கு 16 பைசா, மத்திய அரசு ஆதரவு திட்டங்கள், பாதுகாப்பு துறை திட்டங்களுக்கு தலா 8 பைசா, மானியங்களுக்கு 6 பைசா, ஓய்வூதியங்களுக்கு 4 பைசா, நிதிக்குழு செலவினங்கள், மற்ற செலவினங்களுக்கு தலா 9 பைசா செலவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications