பெரும் எதிர்பார்ப்பு-நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் ஜன.31-ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் 2025-26-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

2025-26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 31-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.

budget 2025 union budget 2025 nirmala sitharaman 2025 2025

ஜனாதிபதி உரை நிகழ்த்திய பின்னர் அரை மணிநேரம் கழித்து ராஜ்யசபா நடவடிக்கைகள் தொடங்கும். பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் 2025-26-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 3-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 13-ந் தேதி வரை ஒரு கட்டமாகவும் 2-வது கட்டமானது மார்ச் 10-ந் தேதி முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரையும் நடைபெறும்.

முன்னதாக ஜனவரி 30-ந் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். கடந்த 23-ந் தேதி அல்வா கிண்டும் நிகழ்வுடன் மத்திய பட்ஜெட் தயாரிப்பு நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். மத்திய பட்ஜெட் 2025-26-ஐ பிப்ரவரி 1-ந் தேதி முற்பகல் 11 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+