பிரதமரின் பள்ளிகள் திட்டம்.. 14 ஆயிரம் பள்ளிகளை மேம்படுத்த அமைச்சரவை ஒப்புதல்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்!
டெல்லி: நாடு முழுவதும் 14 ஆயிரம் பள்ளிகளை பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் நவீன முறையில் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று முன் தினம் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல் ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

பிரதமர் மோடி அறிவிப்பு
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். புதிய தேசிய கல்விக் கொள்கையின் விளைவாக இப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்.

நவீனபடுத்தப்படும் பள்ளிகள்
இதன் மூலம் பள்ளிகள் நவீனப்படுத்தப்பட்டு கல்வி முறையில் பெரும் மாற்றம் கொண்டு வரப்படும். கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கற்றலை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய தொழிற்நுட்பம், நவீன வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நவீன உள்கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தப்படும்.

தேசிய கல்விக் கொள்கை
அண்மை காலங்களில் தேசிய கல்விக் கொள்கை மூலம் கல்வித்துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் விளைவாக எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுவதும் பயனடைவார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

அமைச்சரவை ஒப்புதல்
இந்த நிலையில் நாடு முழுவதும் 14,000 பள்ளிகளை ரூ.27,360 கோடி செலவில் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் உட்பட 14,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மேம்படுத்தப்பட்ட பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்தனர்.

மத்திய அரசின் பங்கு எவ்வளவு?
5 ஆண்டுகளுக்கு மொத்த திட்டத்தின் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும் எனவும், அதில் மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டில் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்துவதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அதேபோல் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மட்டுமே, இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications