அகவிலைப்படி உயர்வு உள்பட மத்திய கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.. என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மசோதா தோல்வி அடைந்த சூழலில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று அவசரமாக கூடியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு 2 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மேலும் மசோதா தோல்வி உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்டிய மத்திய அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்களை தாக்கல் செய்தது. இந்த மசோதாக்கள் மீதான விவாதம் முடிந்த நிலையில், நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த மசோதாக்கள் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால் மசோதாக்கள் தோல்வி அடைந்தன.

Union Cabinet Meeting To be held in Delhi Amid Bill Failed says sources

தொகுதி மறுவரையால் தென் மாநிலங்களுக்கு அநீதி ஏற்படும் என்றும் தற்போதைய எண்ணிக்கையை வைத்தே மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், எந்த ஒரு மாநிலத்திற்கும் பாகுபாடு காட்டப்படாது என்றும் 50 சதவீதம் தொகுதிகள் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று கூறின. எனினும், இதனை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்த நிலையில், நேற்று வாக்கெடுப்பில் மசோதா தோல்வி அடைந்தது. இதையடுத்து ஏனைய மசோதாக்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றது.

மசோதா தோல்வி அடைந்த சூழலில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று அவசரமாக கூடியது. பிரதமர் மோடி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு 2 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு மூலம் பயன்பெறுவார்கள். அகவிலைப்படி பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படும். வழக்கமாக ஜனவரி மறும் ஜூலை மாதங்களில் இதற்கான அறிவிப்புகள் வரும்.

ரூ.13,000 கோடி நிதியுடன் "இறையாண்மை கடல்சார் நிதி" (Sovereign Maritime Fund) உருவாக்கவும் கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதி, இந்தியக் கொடியுடன் இயங்கும் கப்பல்களுக்கும், இந்தியாவிற்கு வருவோரும் செல்லுவோரும் ஆகிய கப்பல்களுக்கும் நிலையான மற்றும் மலிவான காப்பீட்டு பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல, பிரதமர் கிராம சாலை திட்டம் (PMGSY) 2028 வரை நீட்டிக்கப்படுவதற்கும், கூடுதலாக ₹3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்காதது குறித்தும் பிரதமர் மோடி பேசியதாகவும், மசோதாவிற்கு ஆதரவளிக்காமல் எதிர்க்கட்சிகள் ஒரு பெரும் தவறை இழைத்துவிட்டதாகவும், இதற்கான அரசியல் விலையை எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் கூறியதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+