பொதுத்துறை வங்கியில் மேனேஜர் வேலை.. மாதம் 93 ஆயிரம் சம்பளம்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்!
சென்னை: பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் பாதுகாப்பு மேனேஜர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.93 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட பிற விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி கடந்த 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது. நாடு முழுக்க பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் தற்போது பாதுகாப்பு மேலாளர் (MMGS II) பிரிவில் 27 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் பாதுகாப்பு மேலாளர் (Security Manager MMGS II) பதவியில் 27 பணியிடம் நிரப்பப்படுகிறது.

கல்வித் தகுதி மற்றும் அனுபவம்:
கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எதாவது ஒரு பிரிவில் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய ராணுவம் (கேப்டன்), கடற்படை (லெப்டினன்ட்) அல்லது விமானப்படை (ஃப்ளைட் லெப்டினன்ட்) தரத்தில், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆணையிடப்பட்ட அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாற்றாக, துணை போலீஸ் சூப்பிரண்டென்ட் அல்லது துணை ராணுவப் படைகளின் (BSF/CRPF/ITBP/CISF/SSB போன்றவை) உதவி கமாண்டன்ட் பதவிக்குக் குறையாத கெசட்டட் அதிகாரியாக, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 05.05.2026 நிலவரப்படி 23 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதிவாய்ந்த பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு. பட்டியல் சாதியினர்/பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10, 13, 15 ஆண்டுகள் வரை சலுகைகளும் வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்ந்தெடுக்கப்படும் பாதுகாப்பு மேலாளர்களுக்கு மாதம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, தகுதிச் சரிபார்ப்பு, நேர்காணல் மற்றும் இறுதித் தகுதிப் பட்டியல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) ஆகியோருக்கு கிடையாது. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.850 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ் இணையதளத்தில் உள்ள 'Careers' பகுதியைப் பயன்படுத்தி, அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஆரம்ப நாள் 15.04.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2026 ஆகும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள், தேர்வுக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்னதாக, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் Click Here பார்வையிடலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications