அதிரடி.. சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - தாக்கலானது புதிய சட்ட மசோதா
டெல்லி: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தண்டனை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா என்பது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்க வழிவகுக்கிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி 160 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் அதிரடியாக மாற்றம் கொண்டு வர இந்த மசோதாக்கள் இடம் அளிக்கின்றன.

இந்தியாவில் குற்றம் செய்பவர்கள் மீது ஐபிசி எனும் இந்திய தண்டனை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPc), இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) உள்ளிட்டவற்றின் மூலம் தண்டிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய மசோதா என்பது இதற்கு மாற்றாக உள்ளது.
அதன்படி பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, பாரதிய நாய சன்ஹிதா மசோதா, பாரதிய சக்ஷவா மசோதா உள்ளிட்ட 3 சட்ட திருத்த மசோதாக்களை அமித்ஷா தாக்கல் செய்தார். இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட திருத்த மசோதா என்பது இந்திய சட்டங்களில் பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்க உள்ளது. பல பிரிவுகள் நீக்கம் செய்யப்பட உள்ளதோடு, சில பிரிவுகளில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி இந்தியாவில் தறி்போது 511 சட்டப்பிரிவுகள் உள்ளன. அது புதிய மசோதாவில் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 175 பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு புதிய மசோவின்படி 356 சட்டப்பிரிவுகள் இருக்கும்.
இந்தியாவில் 1860ம் ஆண்டு கொண்டு வரப்பபட்டுள்ள சட்டங்கள் தான் தற்போது நடைமுறையில் உள்ளது. இதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும் கூட இன்னும் ஆங்கிலேயர்கள் வகுத்த சட்டமாகவே இருக்கிறது. இதனை மாற்றம் செய்து தான் புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி தேசத்துரோக சட்டம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாநிலங்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளை அதிகரிக்க இந்த புதிய சட்ட மசோதா என்பது இடமளிக்கிறது. அதன்படி சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்க இந்த சட்ட மசோதா இடமளிக்கிறது.
மேலும் கூட்டு பலாத்கார சம்பவங்களில் குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து மரண தண்டனை வழங்கவும் பரிந்துரை செய்கிறது. குறைந்தபட்சம் என்றால் 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வழிவகுத்து கொடுக்கிறது. இதுதவிர தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கினால் குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்படும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications